டைட்டில் வின்னர் விக்ரம்.. எலிமினேஷனுக்கு பின் மேடையில் கலாய்த்த கமல்
பிக் பாஸ் 7ம் சீசன் வீட்டில் இருந்து இன்று சரவண விக்ரம் எலிமினேட் செய்யப்பட்டார். அவரை டைட்டில் வின்னர் என தொடர்ந்து எல்லோரும் கூறி கிண்டல் செய்த நிலையில் இன்று எலிமினேட் ஆனார்.
அவர் வெளியேறிய பின்னர் கமலுடன் பேசும்போதே அதே கேள்வியை தான் கேட்டார். 'கப் வாங்கியபிறகு என்ன பேச வேண்டும் என தயார் செஞ்சு வெச்சிருந்தீங்க, இப்போ என்ன ஆச்சு..' என கேட்டார்.
நானும் அதை எதிர்பார்க்கவில்லை என சொல்லி விக்ரம் சமாளித்தார்.
கலாய்த்த கமல்
அதன் பின் பிக் பாஸ் வீட்டில் உள்ளவர்கள் உடன் அகம் டிவி வழியே பேசும்போது, 'யாரும் எனக்காக அழவில்லையா' என விக்ரம் கேட்க, யாருமே இல்லை என கூறிவிட்டனர்.
"எதிர்பார்க்குறாரு போல.. யாராவது அழுதுருங்க ப்ளீஸ்" என கூறி கமல் மேடையிலேயே விக்ரமை கலாய்த்தார்.
அதன் பிறகு கமல் உடன் நடிக்க வேண்டும் என வித்தியாசமாக பேசி மறைமுகமாக சான்ஸ் கேட்டார் விக்ரம். இப்படி கூட சான்ஸ் கேக்கலாம்னு எனக்கு தெரியாம போய்டுச்சு என கமல் அதற்கும் அவரை கலாய்த்தார்.
You May Like This Video