இளைய தளபதி பட்டம் எனக்கு சொந்தம்.. விஜய் அப்பாவிடம் சண்டை போட்ட நடிகர்

By Parthiban.A Aug 14, 2023 10:30 AM GMT
Report

விஜய்

நடிகர் விஜய் இளைய தளபதியாக முதலில் அழைக்கப்பட்ட நிலையில் தற்போது தளபதி என அது மாற்றம் அடைந்திருக்கிறது. மேலும் அவர் தான் அடத்த சூப்பர்ஸ்டார் என்றும் ஒருபக்கம் பேச்சு இருப்பதால், ரஜினி ரசிகர்கள் மற்றும் விஜய் ரசிகர்கள் தற்போது அதற்காக சண்டை போட்டுக்கொண்டிருக்கிறார்கள்.

மேலும் ஜெயிலர் பட விழாவில் ரஜினி சொன்ன காக்கா கதை விஜய்யை தாக்கி தான் என்றும் ஒரு பேச்சு இருந்து கொண்டிருப்பது எல்லோருக்கும் தெரிந்தது தான்.

இளைய தளபதி பட்டம் எனக்கு சொந்தம்.. விஜய் அப்பாவிடம் சண்டை போட்ட நடிகர் | Saravanan Fight Vijay Father For Ilayathalapathy

இளைய தளபதி பட்டம் எனக்கு சொந்தம்

விஜய் பெயருக்கு முன் இளையதளபதி என பட்டம் போட தொடங்கியபோது அதற்கு பிரபல நடிகர் சரவணன் எதிர்ப்பு தெரிவித்தாராம். பருத்திவீரன் நடிகர் சரவணன் தான்.

90களில் முக்கிய நடிகராக இருந்த சரவணன் இளையதளபதி என படங்களில் பயன்படுத்தி வந்திருக்கிறார். ஆனால் அவர் படங்கள் தொடர்ந்து தோல்வி அடைந்ததால் வாய்ப்பு இல்லாமல் இருந்தாராம். அந்த நேரத்தில் விஜய்யின் அப்பா எஸ்ஏசி இளையதளபதி பட்டத்தை விஜய் படங்களில் போட, சரவணன் அதற்காக சண்டை போட்டிருக்கிறார்.

இது பற்றி தற்போது சரவணன் அளித்து இருக்கும் பேட்டியில், தான் அந்த சின்ன வயதில் அப்படி கோபப்பட்டு பொறாமையில் சண்டை போட்டிருக்கிறேன், ஆனால் இப்போது அந்த டைட்டில் விஜய்க்கு தான் பொருத்தமாக இருக்கிறது என்பது எனக்கு புரிகிறது என சரவணன் கூறி இருக்கிறார். 

இளைய தளபதி பட்டம் எனக்கு சொந்தம்.. விஜய் அப்பாவிடம் சண்டை போட்ட நடிகர் | Saravanan Fight Vijay Father For Ilayathalapathy

+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US