என் சாவுக்கு நீ தான் காரணம்.. விவாகரத்து வேண்டும்.. சரவணன் கொடுத்த அதிர்ச்சி! பாண்டியன் ஸ்டோர்ஸ் புரோமோ
பாண்டியன் ஸ்டோர்ஸ்
பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் இவ்வளவு நாளாக மயில் மறைத்து வைத்திருந்த உண்மை வெளிவந்துவிட்டது.

மயில் தன்னை விட இரண்டு வயது மூத்தவர், டிகிரி படித்திருக்கிறாள் என சொன்னது பொய், இவள் வெறும் 12ஆம் வகுப்பு தான் படித்திருக்கிறாள் என்கிற உண்மையை குடும்பத்தினர் அறிந்துவிட்டனர்.
இதனால் மயிலை வீட்டை விட்டு வெளியேற்றிவிட்டனர். இந்த நிலையில், மீண்டும் தன்னை குடும்பத்தில் சேர்த்துக்கொள்ளுங்கள் என மயில் வீட்டிற்கு வந்து அழுது கேட்கிறார்.
சரவணன் கொடுத்த அதிர்ச்சி
ஆனால், அவரை கோமதி வெளியே தள்ளி வீட்டு கதவை சாத்திவிடுகிறார். இதன்பின், மயில் குரலை கேட்டு வெளியே வரும் சரவணன், நீ இப்போது இந்த இடத்தில் இருந்து போகவில்லை என்றால், என் சாவுக்கு நீ தான் காரணம் என கடிதம் எழுதி வைத்துவிட்டு இறந்துவிடுவேன் என சரவணன் கூறுகிறார்.

மேலும், இனி மயிலுடன் சேர்ந்து வாழ முடியாது, தனக்கு விவாகரத்து வேண்டும் என கூறுகிறார் சரவணன். இனி என்ன நடக்கப்போகிறது என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.
அவுஸ்திரேலியாவை உலுக்கிய பயங்கரவாத தாக்குதல்! மர்ம நபரிடம் துப்பாக்கியை பறித்த நபர் (காணொளி) News Lankasri
சிட்னியில் யூதர்களின் கொண்டாட்டத்தில் மர்ம நபர்கள் துப்பாக்கிச்சூடு! 10 பேர் மரணம்..தெறித்து ஓடிய மக்கள் News Lankasri