பாக்ஸ் ஆபிஸ்: படுதோல்வி அடைந்த சர்தார் 2.. இறுதி வசூல் விவரம்
Sardar 2 Movie Final Box office Collection: கார்த்தி, எஸ்.ஜே. சூர்யா இணைந்து நடித்து கடந்த செப்டம்பர் 10-ஆம் தேதி வெளியான சர்தார் 2 திரைப்படம் பாக்ஸ் ஆபிஸில் படுதோல்வியை சந்தித்தது. இந்த நிலையில், சர்தார் 2 திரைப்படத்தின் இறுதி வசூல் குறித்த தகவல் வெளியாகியுள்ளது; அதைப்பற்றி விரிவாக பார்க்கலாம் வாங்க.
சர்தார் 2
கார்த்தி - பி.எஸ். மித்ரன் கூட்டணியில் உருவாகி கடந்த 2022-ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் சர்தார். இந்த படம் எவ்வளவு பெரிய வெற்றியடைந்தது என்பதை சொல்லி தெரிய வேண்டிய அவசியம் இல்லை. கார்த்தியின் திரை வாழ்க்கையில் ஒரு முக்கிய படமாக இது அமைந்தது.

சர்தார் படத்தின் வெற்றிக்கு பின் நான்கு ஆண்டுகளுக்கு பிறகு சர்தார் 2 உருவாகி வெளியானது. இப்படத்தில் கார்த்தியுடன் இணைந்து முதல் முறையாக எஸ்.ஜே. சூர்யா நடித்துள்ளார். மேலும், மாளவிகா மோகனன், ஆஷிகா ரங்கநாத், ரஜிஷா விஜயன், யோகி பாபு, நிழல்கள் ரவி என பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

இறுதி வசூல்
பிரம்மாண்ட பொருட்செலவில் எடுக்கப்பட்ட இப்படம் பாக்ஸ் ஆபிஸில் படுதோல்வியை சந்தித்துள்ளது. இதனால் மிகப்பெரிய நஷ்டமும் ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில், சர்தார் 2 திரைப்படத்தின் இறுதி வசூல் என்ன என்பது குறித்த தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, இப்படம் இறுதியாக பாக்ஸ் ஆபிஸில் ரூ. 26 கோடி வசூல் செய்துள்ளது.

கார்த்தியின் திரை வாழ்க்கையில் சமீபகாலமாக வெளிவந்த வா வாத்தியாரே, ஜப்பான் ஆகிய படங்களின் வரிசையில், மிகப்பெரிய பட்ஜெட்டில் எடுக்கப்பட்டு மிகமிக குறைவாக வசூல் செய்த திரைப்படங்களில் ஒன்றாக சர்தார் 2 மாறியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
பிரித்தானியாவில் எதிர்ப்பை மீறி புலம்பெயர்ந்தோருக்கு புகலிடம்: குழந்தைளுடன் பொதுமக்கள் ஆர்ப்பாட்டம் News Lankasri