சர்தார் இரண்டாம் பாகம்.. படத்தின் கதாநாயகி யார் தெரியுமா! இவர் தானா
கார்த்தி - சர்தார்
பி.எஸ். மித்ரன் இயக்கத்தில் முன்னணி நடிகர் கார்த்தி நடித்து கடந்த 2022ஆம் ஆண்டு வெளிவந்த திரைப்படம் சர்தார். இப்படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.
இப்படத்தில் கார்த்தி இரட்டை வேடங்களில் நடித்து அசத்தியிருந்தார். ஜி.வி. பிரகாஷ் இசையமைத்திருந்த இப்படத்தில் ராஷி கன்னா, லைலா, ராஜீஷா விஜயன், யுகி சேது உள்ளிட்ட பலரும் நடித்திருந்தனர்.
மாபெரும் வெற்றியடைந்த இப்படத்தின் இரண்டாம் பாகம் தற்போது உருவாகி வருகிறது. முன் தயாரிப்பு பணிகள் நடைபெற்று வந்த நிலையில், அடுத்த மாதம் இப்படத்திற்கான படப்பிடிப்பு துவங்கும் என தகவல் வெளியாகியுள்ளது.
கதாநாயகி இவரா
இந்த நிலையில், சர்தார் 2 திரைப்படத்தில் ஆஷிகா ரங்கநாத் என்பவர் கதாநாயகியாக நடிக்கவுள்ளார் என கூறப்படுகிறது. கன்னடத்தில் மிகவும் பிரபலமான நடிகைகளில் இவரும் ஒருவர். நடிகை ஆஷிகா ரங்கநாத் தமிழில் பட்டத்து அரசன் படத்தின் மூலம் தான் அறிமுகமாகியுள்ளார். அதன்பின் தமிழில் இவர் நடிக்கவுள்ள திரைப்படம் சர்தார் 2 என கூறப்படுகிறது.
முதல் பாகத்திற்கு ஜி.வி. பிரகாஷ் இசையமைத்திருந்த நிலையில், சர்தார் 2 படத்திற்கு யுவன் இசையமைக்கவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

சிரங்கு அரிப்புடன் திரும்பி வர விரும்பவில்லை - கும்பமேளா குறித்து பிரபல கால்பந்து வீரர்! IBC Tamilnadu

பிரித்தானியாவின் பாரிய இஸ்லாமிய கல்லறையை கட்டும் கோடீஸ்வர சகோதரர்கள்! எதிர்ப்பால் பின்னடைவு News Lankasri
