சர்தார் 2 அல்லது மண்டாடி, எது அதிக வசூல் செய்துள்ளது?
இந்த வாரம் தமிழ் சினிமாவிலிருந்து வெளியான சர்தார் 2 மற்றும் மண்டாடி ஆகிய இரண்டு திரைப்படங்கள் உலகளவில் 3 நாட்களில் எவ்வளவு வசூல் செய்துள்ளன என்பது குறித்த தகவல் வெளியாகியுள்ளது.
சர்தார் 2
இயக்குநர் பி.எஸ். மித்ரன் இயக்கத்தில் கார்த்தி நடிப்பில் உருவாகி கடந்த 2022-ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் சர்தார். இப்படத்தின் மாபெரும் வெற்றியை தொடர்ந்து சர்தார் 2 தற்போது வெளியாகியுள்ளது. இப்படத்தில் மாளவிகா மோகனன், ரஜிஷா விஜயன், ஆஷிகா ரங்கநாத், யோகி பாபு, நிழல்கள் ரவி என பல நட்சத்திரங்கள் இப்படத்தில் நடித்துள்ளனர்.

வசூல்
பெரிதும் எதிர்பார்ப்புடன் வெளியான இப்படம் ரசிகர்களிடையே கலவையான விமர்சனங்களை பெற்றுள்ளது. இந்த நிலையில், சர்தார் 2 திரைப்படம் 3 நாட்களில் உலகளவில் செய்துள்ள வசூல் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, இப்படம் உலகளவில் 3 நாட்களில் ரூ. 13 கோடிக்கும் மேல் வசூலித்துள்ளது.

மண்டாடி
சர்தார் 2 திரைப்படத்துடன் கடந்த செப்டம்பர் 10-ஆம் தேதி சூரியின் மண்டாடி திரைப்படமும் வெளியானது. இப்படத்தை இயக்குநர் மதிமாறன் புகழேந்தி இயக்கத்தில் உருவான இப்படத்தில் சூரியுடன் இணைந்து தெலுங்கு நடிகர் சுஹாஸ், மஹிமா நம்பியார், சத்யராஜ் ஆகியோர் நடித்துள்ளனர். ஜி.வி. பிரகாஷ் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.

வசூல்
இப்படம் வெளிவந்து 3 நாட்கள் ஆகும் நிலையில், இப்படியொரு படத்தை உருவாக்கியதற்காக பாராட்டுகள் குவிந்து வருகிறது. மேலும் வசூல் ஒவ்வொரு நாளும் அதிகரித்து வருகிறது. இந்நிலையில், பாக்ஸ் ஆபிஸில் 3 நாட்களை வெற்றிகரமாக கடந்துள்ள மண்டாடி திரைப்படம் இதுவரை உலகளவில் ரூ. 30 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ளது.

இதன் மூலம் 3 நாட்களில் சர்தார் 2 திரைப்படத்தை விட மண்டாடி அதிக வசூல் செய்துள்ளது. இனி வரும் நாட்களில் இந்த இரண்டு திரைப்படங்களுக்கும் எவ்வளவு வசூல் வருகிறது என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.
Bigg Boss 10: மக்களின் சுவாரசியத்திற்காக முனியம்மாவின் விபரீத செயல்... அச்சச்சோ இப்படி மாட்டிக்கிட்டாரே? Manithan
உதடு, நெற்றி, காலில் கடுமையான காயம் - மொஜ்தபா கமேனி குறித்து ஈரான் அதிகாரப்பூர்வ ஒப்புதல் News Lankasri