சர்தார் 2 அல்லது மண்டாடி, எது அதிக வசூல் செய்துள்ளது?
இந்த வாரம் தமிழ் சினிமாவிலிருந்து வெளியான சர்தார் 2 மற்றும் மண்டாடி ஆகிய இரண்டு திரைப்படங்கள் உலகளவில் 3 நாட்களில் எவ்வளவு வசூல் செய்துள்ளன என்பது குறித்த தகவல் வெளியாகியுள்ளது.
சர்தார் 2
இயக்குநர் பி.எஸ். மித்ரன் இயக்கத்தில் கார்த்தி நடிப்பில் உருவாகி கடந்த 2022-ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் சர்தார். இப்படத்தின் மாபெரும் வெற்றியை தொடர்ந்து சர்தார் 2 தற்போது வெளியாகியுள்ளது. இப்படத்தில் மாளவிகா மோகனன், ரஜிஷா விஜயன், ஆஷிகா ரங்கநாத், யோகி பாபு, நிழல்கள் ரவி என பல நட்சத்திரங்கள் இப்படத்தில் நடித்துள்ளனர்.

வசூல்
பெரிதும் எதிர்பார்ப்புடன் வெளியான இப்படம் ரசிகர்களிடையே கலவையான விமர்சனங்களை பெற்றுள்ளது. இந்த நிலையில், சர்தார் 2 திரைப்படம் 3 நாட்களில் உலகளவில் செய்துள்ள வசூல் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, இப்படம் உலகளவில் 3 நாட்களில் ரூ. 13 கோடிக்கும் மேல் வசூலித்துள்ளது.

மண்டாடி
சர்தார் 2 திரைப்படத்துடன் கடந்த செப்டம்பர் 10-ஆம் தேதி சூரியின் மண்டாடி திரைப்படமும் வெளியானது. இப்படத்தை அறிமுக இயக்குநர் மதிமாறன் புகழேந்தி இயக்கத்தில் உருவான இப்படத்தில் சூரியுடன் இணைந்து தெலுங்கு நடிகர் சுஹாஸ், மஹிமா நம்பியார், சத்யராஜ் ஆகியோர் நடித்துள்ளனர். ஜி.வி. பிரகாஷ் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.

வசூல்
இப்படம் வெளிவந்து 3 நாட்கள் ஆகும் நிலையில், இப்படியொரு படத்தை உருவாக்கியதற்காக பாராட்டுகள் குவிந்து வருகிறது. மேலும் வசூல் ஒவ்வொரு நாளும் அதிகரித்து வருகிறது. இந்நிலையில், பாக்ஸ் ஆபிஸில் 3 நாட்களை வெற்றிகரமாக கடந்துள்ள மண்டாடி திரைப்படம் இதுவரை உலகளவில் ரூ. 30 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ளது.

இதன் மூலம் 3 நாட்களில் சர்தார் 2 திரைப்படத்தை விட மண்டாடி அதிக வசூல் செய்துள்ளது. இனி வரும் நாட்களில் இந்த இரண்டு திரைப்படங்களுக்கும் எவ்வளவு வசூல் வருகிறது என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.