சர்தார் 2 திரைப்படம் முதல் நாள் செய்துள்ள வசூல்
கார்த்தி நடிப்பில், இயக்குநர் பி.எஸ். மித்ரன் இயக்கத்தில் உருவாகி நேற்று திரையரங்குகளில் வெளியான சர்தார் 2 திரைப்படத்தின் முதல் நாள் வசூல் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.
சர்தார் 2
இரும்புத்திரை, ஹீரோ போன்ற திரைப்படங்களை இயக்கிய இயக்குநர் பி.எஸ். மித்ரன் இயக்கத்தில், கார்த்தி நடிப்பில் உருவாகி கடந்த 2022-ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் சர்தார். இப்படம் உலகளவில் மாபெரும் வெற்றி பெற்ற நிலையில், இதனை தொடர்ந்து சர்தார் 2 திரைப்படம் உருவானது.

இப்படத்தில் கார்த்தியுடன் இணைந்து மாளவிகா மோகனன், ரஜிஷா விஜயன், ஆஷிகா ரங்கநாத், யோகி பாபு உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். சாம் சி.எஸ் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.

வசூல்
ரசிகர்களிடையே மாபெரும் எதிர்பார்ப்பை உண்டாக்கிய இப்படம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இந்நிலையில், சர்தார் 2 திரைப்படம் முதல் நாள் உலகளவில் செய்துள்ள வசூல் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

அதன்படி, இப்படம் முதல் நாளில் உலகளவில் ரூ. 8 கோடி வசூல் செய்துள்ளது. இது முதல் நாளில் கிடைத்துள்ள நல்ல ஓப்பனிங் ஆகும். இனி வரும் நாட்களில் எவ்வளவு வசூல் செய்யும் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.