கார்த்தி நடித்த சர்தார் படம் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் அடுத்து அதன் இரண்டாம் பாகம் வரும் என ஏற்கனவே அறிவித்து இருந்தார் இயக்குனர் பி.எஸ்.மித்ரன்.
தற்போது அந்த படம் பற்றி ஒரு புது அப்டேட் வெளியாகி இருக்கிறது. வரும் பிப்ரவரி 2ம் தேதி ஷூட்டிங் பூஜை உடன் தொடங்குகிறதாம்.

பெரிய பட்ஜெட்
முதல் பாகத்தை விட இரண்டாம் பாகத்தினை அதிக பட்ஜெட்டில் எடுக்க போகிறார்கள் என்றும், இந்திய அளவில் பாப்புலர் ஆன pan இந்தியா நடிகர்கள் சர்தார் 2ல் நடிக்க பேச்சுவார்த்தையில் இருக்கிறார்கள் என்றும் தகவல் வெளியாகி இருக்கிறது.
வில்லனாக விஜய் சேதுபதி நடிக்க போகிறார் என்றும் கிசுகிசுக்கப்பட்டு வருகிறது. சர்தார் படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைத்த நிலையில், சர்தார் 2க்கு யுவன் தான் இசையமைக்க போகிறார் என்றும் கூறப்படுகிறது.

கோவை மாணவி துஷ்பிரயோகம்: முதலில், அந்தப் பெண் தவறு: இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தன் கருத்து News Lankasri
பிரித்தானியாவின் மிகப்பெரிய பணக்காரர் காலமானார்: வணிக சாம்ராஜ்யத்தை உருவாக்கிய இந்தியர் News Lankasri