பிளாஸ்டிக் பாட்டில் குடிநீருக்கு எதிராக விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் சர்தார் திரைப்படக்குழு செய்த விஷயம்
நடிகர் கார்த்தி நடிப்பில் இயக்குநர் P.S.மித்ரன் இயக்கத்தில் சமீபத்தில் வெளியான திரைப்படம் சர்தார்.
பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்திய சர்தார் திரைப்படம் நேற்று திரைக்கு வந்து மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
சர்தார் திரைப்படம் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற முக்கிய காரணம் அந்த திரைப்படத்தில் சொல்லப்பட்டுள்ள விஷயம் தான்.
ஆம், குடிநீர் வியாபாரம் செய்யப்படுவது மற்றும் இதனால் பின்னால் இந்திய நாடு எந்தளவிற்கு பாதிக்கப்படும் என்பது குறித்து மிகவும் தெளிவாகவும், விரிவாகவும் சொல்லப்பட்டது.
மேலும் அன்றாட மக்கள் நாள்தோறும் பயன்படுத்தும் பிளாஸ்டிக் குடிநீர் பாட்டிலால் உயிர்கொல்லி நோய் பரவ கூடிய ஆபாயம் ஏற்படும் என்பது குறித்த அச்சத்தை ஏற்படுத்தி இருக்கிறது.
சர்தார் திரைப்படத்திலும் யூடியூப் பிரபலம் ரித்விக் கதாபாத்திரம் பிளாஸ்டிக் குடிநீர் பாட்டிலை பயன்படுத்தியதால் உயிர்கொல்லி நோய்க்கு பாதிக்கப்பட்டு இருப்பதாக காண்பிக்கப்பட்டு இருக்கும், அவரின் அம்மா கதாபாத்திரத்தில் நடித்த லைலாவும் பிளாஸ்டிக் குடிநீரை எதிர்த்து போராடும் கதாபாத்திரத்தில் வந்திருப்பார்.
இது குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் சர்தார் திரைப்படக்குழுவும் படத்தின் ப்ரோமோஷனுக்காக குடிநீர் பிளாஸ்டிக் பாட்டிலுக்கு பதிலாக கண்ணாடி பாட்டிலில் படத்தின் போட்டோவுடன் வெளியிட்டு இருந்தனர்.