சர்தார் உதம் படத்தை நிராகரித்த, ஆஸ்கார் குழுவின் சர்ச்சையான பதில்..

Sardhar udham
By Jeeva Oct 26, 2021 03:20 PM GMT
Report

பாலிவுட் நடிகர் விக்கி கௌஷல் நடிப்பில் இயக்குனர் ஷூஜிட் சிர்கார் இயக்கத்தில் வெளியான திரைப்படம் தான் சர்தார் உதம்.

'ஜாலியன் வாலாபாக்' நிகழ்வை தழுவி எடுக்கப்பட்ட இப்படம் அமேசான் பிரைமில் வெளியாகி அனைத்து தரப்பு மக்களிடையேயும் நல்ல வரவேற்பை பெற்றது.

அண்மையில் நடந்த ஆஸ்கார் விருதுக்கான பட்டியலில் சர்தார் உதம் திரைப்படம் தேர்வு செய்யப்படவில்லை. ஆஸ்கார் விருது தேர்வுக்கான நடுவர் குழுவில் இடம்பெற்றுள்ள, இந்திரதீப் தாஸ்குப்தா கூறுகையில், ''இந்தப் படம் ஆங்கிலேயர்கள் மீதான வெறுப்பை சித்தரிக்கிறது என்பதால் தேர்வாகவில்லை'' என்றார்.

மேலும் நாளிதழ் ஒன்றிற்கு பேட்டியளித்த அவர் "ஜாலியன் வாலாபாக் சம்பவத்தைப் பற்றிய சர்தார் உதம் திரைப்படம் நீளமாக இருக்கிறது. இந்திய சுதந்திரப் போராட்டத்தின் வெளிக்காட்டப்படாத ஒரு ஹீரோ குறித்து எடுப்பது நேர்மையான முயற்சி.

ஆனால் அது மீண்டும் ஆங்கிலேயர்கள் மீதான நமது வெறுப்பை வெளிப்படுத்துகிறது. இந்த உலகமயமாக்கல் காலத்தில், இந்த வெறுப்பை பிடிப்பது நியாயமில்லை. படத்தின் தயாரிப்பு சர்வதேச தரத்தில் உள்ளது" என தெரிவித்துள்ளார்.

இப்படத்தை நிராகரித்ததை தொடர்ந்து இணையத்தில் ரசிகர்கள் பலவிதமான கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர். 


+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US