சரிகமப சீசன் 5 வெற்றியாளர் சுசாந்திகா யார் என்று தெரியுமா? அன்றே கணித்த பிரபல நடிகர்
சரிகமப வின்னர் சுசாந்திகா
ஜீ தமிழ் தொலைக்காட்சியின் சூப்பர்ஹிட் நிகழ்ச்சி சரிகமப. இது சீனியர் மற்றும் ஜூனியர் என இரண்டு பிரிவுகளாக நடைபெற்று வருகிறது. இதில் சரிகமப சீனியர் சீசன் 5 பைனல் போட்டி கடந்த வாரம் நடைபெற்றது.

இந்த போட்டியில் மக்களின் வாக்குகளை அதிகளவில் பெற்று டைட்டில் வின்னரானார் சுசாந்திகா. வெற்றியாளராக சுசாந்திகாவுக்கு ரூ. 60 லட்சம் மதிப்புள்ள வீடு பரிசாக வழங்கப்பட்டது. முதல் பரிசை வென்ற சுசாந்திகா பற்றி பலரும் அறியாத சுவாரஸ்யமான தகவல்கள் வெளியாகியுள்ளது.
அன்றே கணித்த பிரபல நடிகர்
டைட்டில் வின்னர் சுசாந்திகா தமிழகத்தில் கோவை மாவட்டத்தை சேர்ந்தவர் ஆவார். தற்போதுதான் 12ஆம் வகுப்பை முடித்துள்ளார். கர்நாடிக் சங்கீதம் பயின்ற இவர், முதல் முறையாக கலந்துகொண்ட நிகழ்ச்சியே இந்த சரிகமப நிகழ்ச்சிதான்.

இது சற்று ஆச்சரியமான விஷயம்தான். ஏனென்றால், தான் பங்கேற்ற முதல் நிகழ்ச்சியிலேயே டைட்டில் வின்னராகி அசத்தியிருக்கிறார். இவர் சிறப்பாக பாடியதை பார்த்த நடிகரும் இயக்குநருமான டி. ராஜேந்தர் "இந்த பெண் பெரிய பின்னணி பாடகியாக வருவார்" என அன்றே அவர் கூறியிருந்தார். அவர் கணித்தது போலவே சுசாந்திகா சரிகமப 5 சாம்பியன் ஆகியுள்ளார்.