சரிகமப Li’l Champs சீசன் 4 டைட்டில் வின்னர் திவினேஷ் உடன் பாடல் பாடிய சிவகார்த்திகேயன்.. வீடியோ இதோ
சரிகமப Li’l Champs
ஜீ தமிழ் சரிகமப Li’l Champs சீசன் 4 பைனல் நேற்று நடைபெற்றது. ஆர்யா, சிவகார்த்திகேயன், சந்தானம் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்துகொண்டனர்.
இந்த இறுதிப்போட்டியில் 6 போட்டியாளர்கள் கடுமையாக போட்டியிட்டனர். இதில் திவினேஷ் டைட்டில் வின்னர் ஆகியுள்ளார். அவருக்கு சிவகார்த்திகேயன் பரிசு வழங்கி இருக்கிறார். இரண்டாம் இடத்தை யோகஸ்ரீ மற்றும் மூன்றாம் இடத்தை ஹேமித்ரா ஆகியோர் பிடித்துள்ளனர்.
திவினேஷ் உடன் சிவகார்த்திகேயன்
இந்த நிலையில், டைட்டில் வின்னர் ஆன திவினேஷ் உடன் இணைந்து சிவகார்த்திகேயன் செய்த விஷயம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
அது வேறு ஒன்றுமில்லை, நடிகர் சிவகார்த்திகேயன் சரிகமப Li’l Champs சீசன் 4 டைட்டில் வின்னர் திவினேஷ் உடன் இணைந்து எம் ஜி ஆரின் 'நான் ஆணையிட்டால்' பாடலை பாடியுள்ளார். இதோ அந்த வீடியோ..
😍😍♥️♥️ pic.twitter.com/nenvUjmS6O
— SmartBarani (@SmartBarani) May 11, 2025

இதுதான் Eleven-க்கு ஸ்பெல்லிங்கா? அரசு ஆசிரியர்கள் - தலைமை ஆசிரியர் எழுதியதை பாருங்க.. IBC Tamilnadu
