ரூ. 10 லட்சம் வென்ற திவினேஷ் வாழ்க்கையில் ஏற்பட்ட சோகம், தினமும் அழும் அவரது அம்மா.. என்ன ஆச்சு?
சரிகமப
ஜீ தமிழில் நிறைய ஹிட் சீரியல்கள், மக்களால் பெரிய அளவில் கொண்டாடப்படும் ரியாலிட்டி ஷோக்கள் உள்ளன. அதில் முக்கியமான ரியாலிட்டி ஷோ என்றால் சரிகமப என்ற பாடல் நிகழ்ச்சி தான்.
ஆரம்பத்தில் மக்களின் கவனம் இந்த நிகழ்ச்சி பக்கம் செல்லவில்லை என்றாலும் இப்போது ஷோவுக்கு இருக்கும் ரேஞ்ச் வேற லெவலில் உள்ளது.
கடைசியாக சரிகமப சிறுவர்களுக்கான சீசன் முடிந்தது, அதில் திவினேஷ் என்பவர் வெற்றிப்பெற்றார்.
பேட்டி
அண்மையில் ஒரு பேட்டியில் திவினேஷ் தனது குடும்ப கஷ்டம் குறித்து பேசியுள்ளார்.
சரிகமப நிகழ்ச்சியில் ஜெயித்த பணத்தை என்ன செய்யப்போகிறீர்கள் என கேட்டுள்ளனர். அதற்கு அவர், இந்த பணத்தை வைத்து தன்னுடைய குடும்ப கடனை அடைக்கப்போகிறேன்.
இந்த பணத்தை வைத்து கடன் அடைக்கனும்கு அம்மா சொன்னது கிடையாது, ஆனார் என்னுடைய அம்மா தினமும் கடனை நினைத்து அழுதுட்டு இருப்பாங்க.
அதை பார்த்து எனக்கு இந்த பணத்தை வைத்து கடனை அடைக்கனும்னு தோணுச்சு என்று சொல்லியிருக்கிறார்.