இலங்கை பெண்ணும் பங்குபெறும் சரிகமப பைனல் நிகழ்ச்சிக்கு இவர்கள் வருகிறார்களா?- வைரலாகும் வீடியோ
சரிகமப நிகழ்ச்சி
ஜீ தமிழ் தொலைக்காட்சி நிகழ்ச்சிகள், சீரியல்களுக்கு என்று தனி ரசிகர்கள் வட்டாரமே உள்ளது. அவர்களும் ரசிகர்களுக்கு ஏற்றவாரு புத்தம் புது தொடர்கள், நிறைய சூப்பரான நிகழ்ச்சிகள் என ஒளிபரப்பி வருகிறார்கள்.
அப்படி அண்மையில் ரசிகர்கள் பெரிய அளவில் வரவேற்பு கொடுத்துவரும் நிகழ்ச்சி தான் சரிகமப. பெரியவர்கள்-சிறியவர்கள் என நிகழ்ச்சி தொடர்ந்து நடந்து வருகிறது. தற்போது சிறியவர்களுக்கான சரிகமப Lil Champs 3 சீசன் நடந்து வருகிறது.
கடந்த ஜுலை 1ம் தேதி தொடங்கப்பட்ட இந்த நிகழ்ச்சியை அர்ச்சனா தொகுத்து வழங்க ஸ்ரீநிவாஸ், அபிராமி, விஜய் பிரகாஷ் மற்றும் சைந்தவி ஆகியோர் நடுவர்களாக உள்ளனர்.
நிகழ்ச்சியும் நாளை டிசம்பர் 17, சரிகமப 3வது சீசன் முடிவுக்கு வருகிறது, இதில் யார் வெற்றியாளராக இருப்பார் என்பதை காண ரசிகர்கள் படு ஆர்வமாக உள்ளனர்.
ஸ்பெஷல் நபர்கள்
நாளை படு பிரம்மாண்டமாக நடக்க இருக்கும் சரிகமப சீசன் 3 நிகழ்ச்சியின் சிறப்பு விருந்தினர்களாக மழை வெள்ளத்தில் இரவு-பகல் பார்க்காமல் உழைத்த தூய்மை பணியாளர்கள் வர இருக்கிறார்களாம்.
அவர்களில் சிலரை தொகுப்பாளினி அர்ச்சனா நேரில் சந்தித்து அழைத்துள்ளார்.
அவர் தூய்மை பணியாளர்களை நேரில் சந்தித்தபோது எடுத்த வீடியோ வெளியாக மக்கள் இது மிகவும் நல்ல விஷயம் என தொலைக்காட்சி குழுவினரை பாராட்டி வருகிறார்கள்.