அட்டகாசமாக தொடங்கியது ஜீ தமிழின் சரிகமப Lil சாம்ப்ஸ் புதிய சீசன்... சாய் அபயங்கர் சூப்பர் என்ட்ரி, வீடியோ
சரிகமப
ஜீ தமிழில் பிரம்மாண்டத்தின் உச்சமாக ஒளிபரப்பாகும் நிகழ்ச்சிகளில் ஒன்று தான் சரிகமப.
கடைசியாக சீனியர்களுக்கான 5வது சீசன் முடிவுக்கு வந்தது, இப்போது சரிகமப லிட்டில் சேம்ப்ஸ் சீசன் 5 தொடங்கவுள்ளது. தமிழகம் முழுவதிலும் இருந்து மெகா ஆடிஷன் மூலம் தேர்ந்தெடுக்கப்பட்ட போட்டியாளர்களும் சரிகமப மேடையில் பாட தயாராகிவிட்டார்கள்.

புரொமோ
இந்த புதிய சீசனையும் விஜே அர்ச்சனா தான் தொகுத்து வழங்குகிறார்.
நடுவர்களாக ஸ்ரீனிவாஸ், ஸ்வேதா மோகன், சைந்தவி மற்றும் எஸ்.பி.சரண் இருக்கிறார்கள். சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் இரவு 9.30 மணிக்கு ஒளிபரப்பாக உள்ளதாம்.

இந்த சரிகமப சீசன் 5 மெகா ஆடிஷன் நிகழ்ச்சி படு மாஸாக நடந்துள்ளது, அதன் புரொமோ வெளியாகியுள்ளது. இந்த சிறுவர்களுக்கான நிகழ்ச்சியில் இளம் இசையமைப்பாளர் சாய் அபயங்கர் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டுள்ளார்.
இலங்கையில் வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட மக்கள்: பல கோடி மதிப்பிலான காணியை வழங்கிய நன்கொடையாளர் News Lankasri