ஆஸ்திரேலியா கிரிக்கெட் வீரர் Shane Watsonஐ சந்தித்த சரிகமப சபேசன்... அவரே வெளியிட்ட போட்டோ
சரிகமப சீசன் 5
ஜீ தமிழ் தொலைக்காட்சி சன் மற்றும் விஜய் டிவிகளுக்கு இடையில் இவர்களும் நல்ல சீரியல்கள்-ரியாலிட்டி ஷோக்கள் ஒளிபரப்பி ரசிகர்கள் மனதை கவர்ந்து வருகிறார்கள்.
அப்படி ஜீ தமிழில் ரசிகர்களால் கொண்டாடப்பட்ட ஒரு ரியாலிட்டி ஷோ என்றால் அது சரிகமப நிகழ்ச்சி தான்.

இந்த ரியாலிட்டி ஷோ சீனியர்கள்-ஜுனியர்கள் என மாற்றி மாற்றி நடந்து வருகிறது, இப்போது சிறுவர்களுக்கான சீசன் ஒளிபரப்பாகி வருகிறது. இந்த சரிகமப நிகழ்ச்சியில் மிகவும் கஷ்டப்படும் குடும்பத்தில் இருந்து வந்தவர்கள் தான் அதிகம் போட்டியாளர்களாக களமிறங்குகிறார்கள்.
சபேசன்
அப்படி கடந்த சரிகமப சீசன் 5 நிகழ்ச்சியில் பெரிய போராட்டங்களுக்கு பிறகு இலங்கையில் இருந்து சென்னை வந்து ஜீ தமிழ் சரிகமப நிகழ்ச்சியில் பங்குபெற்று கலக்கியவர் தான் சபேசன்.
சரிகமப 5வது சீசனின் ரன்னர் அப்பாக சபேசன் வென்றார், அந்த பைனல் மேடையில் சபேசனுக்கு எஸ்.பி.சரண் ஒரு பரிசையும் கொடுத்திருந்தார்.

நிகழ்ச்சி முடிந்து தனது இசைப் பயணத்தில் கலக்கிக் கொண்டிருக்கிறார் சபேசன், நிறைய இசை மேடைகளில் பாடல்கள் பாடி வருகிறார். இந்த நிலையில் சபேசன் லண்டனில் பிரபல ஆஸ்திரேலியா கிரிக்கெட் வீரர் Shane Watsonஐ சந்தித்துள்ளார்.
அப்போது எடுக்கப்பட்ட புகைப்படங்களை சபேசன் வெளியிட ரசிகர்கள் லைக்ஸ் குறித்து வருகிறார்கள்.
கனடாவை உலுக்கிய துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் அதிர்ச்சி திருப்பம்: வெளிவரும் புதிய தகவல் News Lankasri
ரூ.17.5 கோடி வீட்டின் பால்கனியில் விவசாயம் செய்யும் நடிகர் மாதவன் - நீங்களும் செய்ய 5 எளிய வழிகள் இதோ! Manithan
28 ஆண்டுகள், 29 நாடுகள், 50,000 கி.மீ நடைபயணம்- பிரித்தானியாவிற்கு திரும்பிய சாகச வீரர் News Lankasri