சரிகமப 4 பாடல் நிகழ்ச்சியில் இருந்து இந்த வாரம் எலிமினேட் ஆகப்போவது யார்?
சரிகமப 4
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் சூப்பர் சிங்கர் எந்த அளவிற்கு பிரபலமாக ஒளிபரப்பாகிறதோ அதே போல் ஜீ தமிழில் ஒளிபரப்பாகும் சரிகமப 4 நிகழ்ச்சியும் வெற்றிகரமாக ஒளிபரப்பாகிறது.
மக்களின் பேராதரவோடு சமீபத்தில் தொடங்கப்பட்ட இந்த 4வது சீசன் ஒவ்வொரு வாரமும் சனி மற்றும் ஞாயிறு தினங்களில் இரவு 7 மணிக்கு ஒளிபரப்பாகி வருகிறது.
அர்ச்சனா தொகுத்து வழங்கும் இந்த நிகழ்ச்சியின் நடுவர்களாக ஸ்ரீனிவாஸ், விஜய் பிரகாஷ், கார்த்திக் மற்றும் சைந்தவி ஆகியோர் நடுவர்களாக பங்கேற்கிறார்கள்.
எலிமினேஷன்
கடந்த இரு வாரங்களாக டெடிகேஷன் ரவுண்ட் நடந்து முடிந்ததை தொடர்ந்து இந்த வாரம் மண் வாசனை சுற்று நடைபெற உள்ளது. சரத் சாந்து பொட்டு பாடலையும், இந்திரஜித் மற்றும் அருளினி ஆகியோர் இணைந்து தாமரை பூவுக்கும் பாடலை பாடியுள்ளனர்.
அதேபோல் இஞ்சி இடுப்பழகி பாடலை வீரப்பாண்டி, கோபிகா ஆகியோர் பாடினர். அனைவரும் பாடி முடித்ததும் எலிமினேஷன் வந்தது, டேஞ்சர் சோனில் பொக்கிஷா மற்றும் சாரங்கா உட்பட சிலர் வந்துள்ளனர்.
இவர்களில் யார் வெளியேறுவார் என்பதை இந்த வாரத்தில் காண்போம்.