சரிகமப 4 நிகழ்ச்சியில் தனது ஆசையை கூறிய இலங்கை பாடகர், கார்த்தி கொடுத்த சர்ப்ரைஸ்- நெகிழ்ச்சியான சம்பவங்கள்
சரிகமப 4
தமிழ் சின்னத்திரையில் எத்தனையோ ரியாலிட்டி ஷோக்கள் உள்ளது, அதில் ஒன்று பாடல் நிகழ்ச்சிகள்.
விஜய்யில் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி எப்படி பெரிய அளவில் கொண்டாடப்படுகிறதோ அதே அளவிற்கு ஜீ தமிழில் உள்ள சரிகமப நிகழ்ச்சிக்கும் ரசிகர்கள் மத்தியில் பெரிய வரவேற்பு உள்ளது.
தற்போது சரிகமப 4வது சீசன் வெற்றிகரமாக தொடங்க ஒளிபரப்பாகி வருகிறது. விறுவிறுப்பாக நடந்து முடிந்த ஆடிஷன் மூலமாக மொத்தம் 24 போட்டியாளர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
இந்த நிலையில் நிகழ்ச்சியில் போட்டியாளர்கள் தங்களது ஆசையை கூற ஒரு ஒருவரின் ஆசையை தான் நிறைவேற்றுவதாக பாடகர் கார்த்தி கூறியிருக்கிறார்.
யார் அவர்
இலங்கையை சேர்ந்த விஜய் லோஷன் ஒரு மாலை இளம்வெயிற் காலம் என்ற பாடலை பாடியதோடு நடுவர் கார்த்தியுடன் இந்த பாடலை ஒரு லைன் பாட வேண்டும் என்று கேட்க அவர் ஆசை நிறைவேறி இருக்கிறது.
அதேபோல் இலங்கையை சேர்ந்த இன்னொரு போட்டியாளரான இந்திரஜித் பாடலை பாடி முடித்தவுடன் நடுவர்கள் உங்களுடைய ஆசை என்ன என்று கேட்டனர்.
அதற்கு அவர் SPB அவர்களின் சமாதிக்கு போகணும் என்று சொல்ல கார்த்திக் அதுக்கான ஏற்பாடுகளை நான் செய்து தருகிறேன் என்று வாக்கு கொடுத்து அவரை இன்ப அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளார்.