பொம்பள மாதிரி இருக்கான், மோசமான சம்பவங்களை எதிர்க்கொண்ட ஜீ தமிழ் நிகழ்ச்சி போட்டியாளர்... அம்மா பகிர்ந்த சோகமான விஷயம்
ஜீ தமிழ்
ஜீ தமிழில் நிறைய ரியாலிட்டி ஷோக்கள் மிகவும் பிரபலமாக ஓடுகிறது.
சரிகமப, டான்ஸ் ஜோடி டான்ஸ் போன்ற நிகழ்ச்சிகளுக்கு ரசிகர்களிடம் மிகப்பெரிய வரவேற்பு கிடைத்து வருகிறது. அப்படி கடந்த ஆகஸ்ட் 10ம் தேதி ஜீ தமிழில் சிங்கிள் பசங்க என்ற நிகழ்ச்சி தொடங்கப்பட்டது.
பல துறைகளில் கலக்கும் சிங்கிளாக இருக்கும் பசங்களுக்கு சரியான பார்ட்னர் பார்க்கும் ஒரு கலகலப்பான நிகழ்ச்சியாக உள்ளது.
இதில் பார்த்திபன், ஸ்ருத்திகா அர்ஜுன், ஆல்யா மானசா ஆகியோர் நடுவர்களாக உள்ளனர்.
எமோஷ்னல்
இந்த நிகழ்ச்சியில் Youtuber Blacky Star சுரேஷ் கலந்துகொண்டு வருகிறார்.
சமீபத்திய நிகழ்ச்சியில் சுரேஷ் அம்மா கலந்துகொண்டு ஒரு விஷயம் குறித்து பேசியுள்ளார். அவர், இந்த மேடையில் நிக்க மகன் தான் காரணம்.
எவ்வளவோ அடி வாங்கி, அவனை விரட்டி அடிச்சி, பொம்பள மாதிரி இருக்கான் என்று கேவலப்படுத்தி ரொம்ப அசிங்கமா பேசுவாங்க.
வாழ்க்கையில் அவன் விழுந்து விழுந்து எழுந்தான், அதற்கு பதில் இப்போது கிடைத்துள்ளது, எல்லோரும் நன்றாக இருக்கணும். எல்லா பிள்ளைகளும் நல்லா இருக்க வேண்டும் என எமோஷ்னலாக பேசியுள்ளார்.