சரிசமப சீசன் 5 போட்டியாளரும், தேவயானி மகளுமான இனியாவின் பிறந்தநாள் கொண்டாட்டம்... போட்டோஸ் இதோ
சரிகமப சீசன் 5
ஜீ தமிழில் ஒளிபரப்பான நிகழ்ச்சியில் தமிழக மக்களால் அதிகம் கொண்டாடப்பட்ட ஷோ சரிகமப.
சீனியர், ஜுனியர் என பல சீசன்கள் மாறி மாறி நடக்கிறது. இப்போது ஜுனியர்களுக்கான சீசன் நடைபெற்று வருகிறது, இதில் போட்டியிடும் போட்டியாளர்களும் இப்போது நன்றாக ரீச் ஆகிவிட்டனர்.

இனியா
கடைசியாக நடந்து முடிந்த சரிகமப சீசன் 5 நிகழ்ச்சியின் டைட்டிலை சுசாந்திகா வென்றார், அவருக்கு ரூ. 60 லட்சம் மதிப்புள்ள வீடு பரிசாக வழங்கப்பட்டது.
முதல் ரன்னர் அப்பரான சபேசனுக்கு 10 லட்சம் ரூபாய் பரிசும், 2ம் ரன்னர் அப்பரான சின்னு செந்தமிழனுக்கு 3 லட்சம் ரூபாய் மதிப்பு தங்கமும், பவித்ராவிற்கு 5 லட்சம் மதிப்புள்ள தங்கம் பரிசாக வழங்கப்பட்டது.

இவர்களை தாண்டி மக்கள் கவனித்த சரிகமப சீசன் 5 போட்டியாளர்களில் ஒருவர் தான் நடிகை தேவயானி மகள் இனியா. இவர் எல்லா வாரமும் நன்றாக தான் பாடி வந்தார், ஆனால் அவரால் பைனல் வரை வர முடியவில்லை.

இந்த நிலையில் இனியா தனது இன்ஸ்டாவில் பிறந்தநாள் கொண்டாட்ட புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். 20 வயதை எட்டியுள்ள அவருக்கு ரசிகர்களும் வாழ்த்து கூறி வருகிறார்கள்.
