இதுவரை பாடல் நிகழ்ச்சிகளில் நடக்காத ஒரு பிரம்மாண்ட பரிசுத் தொகை.... அறிவித்த சரிகமப லில் சாம்ப்ஸ் டீம்
சரிகமப
தமிழ் சின்னத்திரைக்கு ரசிகர்கள் மத்தியில் பெரிய வரவேற்பு உள்ளது. எனவே நிறைய ரியாலிட்டி ஷோக்களை சன், விஜய் மற்றும் ஜீ தமிழ் ஒளிபரப்பி வருகிறார்கள்.
அப்படி ரசிகர்களால் கொண்டாடப்படும் ரியாலிட்டி ஷோக்களில் சூப்பர் சிங்கர், சரிகமப நிகழ்ச்சிகள் முக்கியமானவை.
இப்போது சூப்பர் சிங்கர் சீனியர்களுக்கான 11வது சீசன் இறுதிக்கட்டத்தை எட்டிவிட்டது, விரைவில் பைனல் வரப்போகிறது. அதேபோல் ஜீ தமிழில் இப்போது சரிகமப சீசன் 5 ஜுனியர்கனுக்கான நிகழ்ச்சி ஒளிபரப்பாகி வருகிறது.

பரிசுத் தொகை
சரிகமப ஷோவிற்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல ரீச் கிடைத்துள்ளதால் அவர்களும் நிகழ்ச்சியில் நிறைய வித்தியாசங்களை காட்டி வருகிறார்கள். ஒவ்வொரு சீசனிலும் ஏதாவது ஸ்பெஷல் விஷயத்தை கொண்டு வருகிறார்கள்.
அப்படி இப்போது சரிகமப லில் சாம்ப்ஸ் 5வது சீசன் குறித்து ஒரு ஸ்பெஷல் தகவல் வந்துள்ளது.
அதுஎன்னவென்றால், சரிகமப லில் சாம்ப்ஸ் 5வது சீசன் டைட்டில் வின்னருக்கு DRA நிறுவனம் 50 லட்சம் இல்லை 60 லட்சம் இல்லை 1 கோடி மதிப்பிலான பிரம்மாண்ட வீட்டை பரிசாக கொடுக்க முன்வந்துள்ளனர்.