ரூ. 20 லட்சம் மதிப்புள்ள இடத்தை சரிகமப 5 புகழ் பவித்ராவிற்கு பரிசாக கொடுத்த பிரபலம்... வீடியோவுடன் இதோ
சரிகமப சீசன் 5
ஜீ தமிழ் தொலைக்காட்சியில் சீரியல்கள் மிகவும் பிரபலம்.
அடையும் தாண்டி ரியாலிட்டி ஷோக்களுக்கும் ரசிகர்களிடம் மிகப்பெரிய வரவேற்பு கிடைத்து வருகிறது.
அப்படி ரசிகர்களால் கொண்டாடப்படும் ஒரு ரியாலிட்டி ஷோ தான் சரிகமப. பாடல் திறமை கொண்டவர்கள் இந்நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பிரபலம் அடைகிறார்கள், படங்களில் பாடவும் வாய்ப்புகள் பெறுகிறார்கள்.
அப்படி சரிகமப சீசன் 5 நிகழ்ச்சியில் கலந்துகொண்டு மக்களின் பேராதரவை பெற்றவர் தான் பவித்ரா. இறுதி வரை வந்தவர் பெரிய மேடை ஏறவில்லை, ஆனால் மக்கள் மனதில் இடம் பிடித்துவிட்டார் என்று தான் கூற வேண்டும்.

பெரிய இடம்
சமீபத்தில் இவருக்கு இசையமைப்பாளர் டி.இமான் இசையில் ஒரு படத்தில் பாடல் பாடும் வாய்ப்பு கிடைத்தது, அந்த புகைப்படங்கள் வெளியாக ரசிகர்கள் மனதார வாழ்த்து கூறி வந்தனர்.
இந்த நிலையில் பவித்ராவிற்கு இன்னொரு ஸ்பெஷல் விஷயம் நடந்துள்ளது.
ரூ. 20 லட்சம் மதிப்புள்ள ஒரு இடத்தை Terrenum Homes என்ற நிறுவனம் பரிசாக கொடுத்துள்ளனர். அதனை கேட்டதும் பவித்ரா சந்தோஷத்தின் உச்சத்திற்கே சென்றுவிட்டார் என கூறலாம். வீடியோ இதோ,
தீவிரமடையும் ட்ரம்பின் அடுத்த நகர்வு... டென்மார்க் அதிகாரிகளை சந்திக்கவிருக்கும் ரூபியோ News Lankasri