சரிகமப சீசன் 5 புகழ் பவித்ராவுக்கு அடித்த லக்... யாருடைய இசையமைப்பில் பாடுகிறார் தெரியுமா?
சரிகமப சீசன் 5
பாடல் பாடும் திறமை கொண்டவர்களுக்கு ஒரு பெரிய வாய்ப்பு மேடையாக அமைந்தது தான் சூப்பர் சிங்கர், சரிகமப போன்ற நிகழ்ச்சிகள்.
சமீபத்தில் ஜீ தமிழில் சரிகமப சீசன் 5 நிகழ்ச்சி பிரம்மாண்டத்தின் உச்சமாக ஒளிபரப்பாகி முடிவுக்கும் வந்தது. இந்த நிகழ்ச்சியின் வெற்றியாளராக சுசாந்திகா வென்றார், அதோடு அவருக்கு ரூ. 15 லட்சம் பணமும் கொடுக்கப்பட்டது.
தற்போது சிறுவர்களுக்கான சரிகமப நிகழ்ச்சி ஒளிபரப்பாகி வருகிறது.

பவித்ரா
சரிகமப சீசன் 5 நிகழ்ச்சியின் மூலம் புகழ் பெற்றவர் தான் பவித்ரா.
இவர் பெயரை சொன்னதுமே முதலில் அவர் பாடிய பாடல்களில் தக் லைஃப் படத்தில் இடம்பெற்ற உணர்ச்சி நிறைந்த பாடலான அஞ்சு வண்ணப் பூவே என்ற பாடல் தான் நியாபகம் வரும்.

நிகழ்ச்சி முடிந்து அவரவர் பணிகளை கவனித்து வர பவித்ரா குறித்து ஒரு சூப்பரான தகவல் வந்துள்ளது.
அதாவது பவித்ராவிற்கு பிரபல இசையமைப்பாளர் டி.இமான் இசையில் பாடும் வாய்ப்பு கிடைத்துள்ளது. இமானுடன் அவர் எடுத்த புகைப்படத்தை இன்ஸ்டாவில் வெளியிட ரசிகர்கள் அவருக்கு வாழ்த்து கூறி வருகிறார்கள்.
