பிரம்மாண்ட இறுதி மேடையில் பாடப்போகும் சரிகமப சீசன் 5 போட்டியாளர்கள் யார் யார்?... இதோ
சரிகமப சீசன் 5
சரிகமப, பாடும் திறமை கொண்டவர்கள் தங்களது திறமையை வெளிக்காட்டி பெரிய மேடை ஏறும் ஒரு பயணமாக அமைந்தது இந்த ரியாலிட்டி ஷோ.
ஜீ தமிழில் சீனியர், ஜுனியர் என மாறி மாறி ஒவ்வொரு சீசனும் நடக்க இப்போது பெரியவர்களுக்கான 5வது சீசன் ஒளிபரப்பாகி வருகிறது.
கடந்த மே மாதம் தொடங்கப்பட்ட இந்த ஷோவில் ஒவ்வொரு வாரமும் கடுமையாக பயிற்சி செய்து போட்டியாளர்கள் தங்களை நிரூபித்து வந்தார்கள்.
தற்போது சரிகமப சீசன் 5 இறுதிக்கட்டத்தை எட்டிவிட்டது என்பது எல்லோருக்கும் தெரிந்தது தான்.

பைனலிஸ்ட்
கடந்த சில வாரங்களாக பைனலிஸ்ட்டி தேர்வு தான் நடந்து வருகிறது.
ஒவ்வொரு வாரமும் ஒரு பைனலிஸ்ட் தேர்வாகி இப்போது பைனல் மேடையில் பாட 6 போட்டியாளர்கள் தேர்வாகியுள்ளனர். இந்த 6 போட்டியாளர்கள் பின்னால் நிறைய கஷ்டமான பாதை, கடினமான விஷயங்கள் உள்ளது.
சரிகமப சீசன் 5ன் 6 பைனலிஸ்ட் யார் யார் என்றால், சுஷாந்திகா, சபேசன், செந்தமிழன், பவித்ரா, ஸ்ரீஹரி மற்றும் ஷிவானி ஆகியோர் தேர்வாகியுள்ளனர்.