ஜீ தமிழின் பிர்ம்மாண்ட நிகழ்ச்சியான சரிகமப 5வது சீசனில் புதிய நடுவர்.... இனி இசையோடு பஞ்ச் தெறிக்க போகுது..
சரிகமப சீசன் 5
ஜீ தமிழ், தமிழ் சின்னத்திரை ரசிகர்களால் கொண்டாடப்படும் தொலைக்காட்சிகளில் ஒன்று.
ஆரம்பத்தில் சில சீரியல்களை ஒளிபரப்பி கவனம் பெற்ற இந்த தொலைக்காட்சியில் இப்போது ஏகப்பட்ட ஹிட் சீரியல்களும், ரியாலிட்டி ஷோக்களும் ஒளிபரப்பாகி வருகிறது.
பிரம்மாண்ட ஷோ
தற்போது ஜீ தமிழில் ஒளிபரப்பாகும் ரியாலிட்டி ஷோக்களில் ரசிகர்களால் பெரிய அளவில் கவனிக்கப்படும் ஷோவாக உள்ளது சரிகமப. சிறியவர்கள், பெரியவர்களுக்கான சீசன் என மாறி மாறி நடக்கிறது.
கடந்த சில வாரங்களுக்கு முன் சரிகமப லிப் சாம்ப்ஸ் நிகழ்ச்சி முடிவுக்கு வந்தது, இதில் வெற்றியாளராக திவினேஷ் விருது பெற்றார். சிறியவர்களுக்கான சீசன் முடிவுக்கு வந்த வேகத்தில் சீனியர்களுக்கான ஷோ தொடங்கிவிட்டது.
சரிகமப சீனியர்களுக்கான சீசன் 5 நிகழ்ச்சி இன்று முதல் ஒளிபரப்பாக உள்ளது. இதில் புதிய நடுவராக நடிகர், பாடகர், இயக்குனர் என பன்முக கொண்ட டி.ராஜேந்தர் அவர்கள் களமிறங்குகிறார்.
இசையோடு சேர்த்து இனி பஞ்ச் தெறிக்க போகுது என ரசிகர்களும் கமெண்ட் செய்து வருகிறார்கள்.