இறுதிப்போட்டிக்குள் நுழையப்போகும் கடைசி போட்டியாளர் யார்?... பரபரப்பான சரிகமப சீசன் 5 மேடை
சரிகமப சீசன் 5
சரிகமப, வெறும் பாடகர்களை தேர்ந்தெடுக்கும் மேடையாக மட்டுமில்லாமல் பல புதிய திறமைகளை திரையுலகிற்கு அறிமுகப்படுத்தும் ஒரு தளமாக உள்ளது.
இந்த பாடல் நிகழ்ச்சியின் மூலம் திரைப்படங்களில் பாடும் வாய்ப்பை பல போட்டியாளர்கள் பெற்றுள்ளனர். இந்த சரிகமப 5வது சீசனில் தமிழ் சினிமா கொண்டாடிய பிரபல நடிகை தேவயானி மகள் இனியா கலந்துகொண்டு போட்டியிட்டது ஒரு சிறப்பாக பார்க்கப்பட்டது.
அவரும் ஒவ்வொரு வாரமும் நிறைய பாடல்கள் பாடி நடுவர்களை அசத்தி வருகிறார்.

பைனல் போட்டியாளர்
மே மாதம் தொடங்கப்பட்ட சரிகமப 5வது சீசன் ஒவ்வொரு வாரமும் வித்தியாசமான கான்செப்டுடன் ஒளிபரப்பாகி வந்தது.

ரசிகர்களின் பேராதரவு பெற்ற இந்த 5வது சீசன் தற்போது இறுதிக்கட்டத்தை எட்டிவிட்டது. அந்த பிரம்மாண்ட மேடையில் இறுதிப் போட்டியில் பாடப்போகும் போட்டியாளர்களின் தேர்வு தான் One & Only Roundவுடன் கடந்த சில வாரங்களாக நடந்து வருகிறது.

சுஷாந்திக்கா, ஸ்ரீஹரி, சபேசன் ஆகியோர் தேர்வாகியுள்ளனர். இந்த வாரம் தேர்வாகப்போகும் அந்த போட்டியாளர் யார் என்பதை அரிய தான் மக்கள் மிகவும் ஆர்வமாக உள்ளனர்.
இந்த One & One Round எபிசோடில், கவின், ஆண்ட்ரியா ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்துகொண்டுள்ளனர்.