விஜயகாந்த் மகன் என்பதை நிரூபித்த விஜய பிரபாகரன்... சரிகமப மேடையில் நெகிழ்ச்சி சம்பவம்
சரிகமப
சரிகமப ஜீ தமிழில் அர்ச்சனா தொகுத்து வழங்க சரிகமப பாடல் நிகழ்ச்சி ஒளிபரப்பாகி வருகிறது.
நடுவர்களாக விஜய் பிரகாஷ், ஸ்ரீனிவாஸ், கார்த்திக் மற்றும் சைந்தவி ஆகியோர் உள்ளனர்.
ஒவ்வொரு வாரமும் ஒரு கான்செப்டுடன் நிகழ்ச்சி ஒளிபரப்பாகி வருகிறது. அந்த வகையில் விஜயகாந்தின் பிறந்தநாளை கொண்டாடும் விதமாக இந்த வாரம் விஜயகாந்தின் சூப்பர் ஹிட் பாடல்கள் ரவுண்டு வைத்துள்ளனர்.
புரொமோ
சமீபத்தில் கணவரை இழந்த போட்டியாளர் பவித்ரா தனது கணவரின் கனவை நிறைவேற்ற வேண்டும் என்பதற்காக சரிகமப நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பாடி வருகிறார்.
இந்த வாரம் பவித்ராவின் பாடலைக் கேட்டு முடித்ததும் விஜய பிரபாகரன் பேசுகையில், பவித்ரா அக்கா இனி என்னுடைய சொந்த அக்கா தான். அவருடைய மகளின் படிப்புக்கு என்ன தேவையோ அதை நான் எப்போதும் செய்வேன்.
உங்களுக்கு ஒரு தம்பியாக நான் எப்போதும் துணை இருப்பேன், ஒரு தேதி சொல்லுங்கள் உங்களது மகளுக்கு எனது மடியில் உட்கார வைத்து காது குத்துவோம் என கூற பவித்ரா மகிழ்ச்சியடைகிறார்.