விஜய்யிடம் அரசியலுக்கு நீங்க செட்டாக மாட்டீங்கனு சொன்னேன்.. பிரபல நடிகர் ஓபன் டாக்
தவெக விஜய்
கரூரில் நடந்த தவெக பிரச்சாரத்தின் போது கூட்ட நெரிசல் ஏற்பட்டு 41 பேர் உயிரிழந்த துயர சம்பவம் அனைவரையும் உலுக்கியது. இந்த சம்பவம் நடந்த நிலையில், அன்றிரவே கரூர் மக்களை நேரில் சென்று சந்திக்க காவல்துறையிடம் அனுமதி கேட்டுள்ளார் விஜய். ஆனால், அவர்கள் அனுமதி தர மறுத்துள்ளதாக கூறப்படுகிறது.
இதன்பின் சென்னை திரும்பிய விஜய், நீலாங்கரை வீட்டில் இருந்தார். 34 மணி நேரம் கழித்து நீலாங்கரை வீட்டில் இருந்து வெளியே வந்த விஜய், பட்டினப்பாக்கத்தில் உள்ள தனது வீட்டிற்கு சென்று, தனது கட்சி நிர்வாகிகளை நேரில் அழைத்து ஆலோசனை நடத்தி வருகிறார்.
இந்த துயர சம்பவம் குறித்து திரையுலக சேர்ந்த பலரும் தங்களது கருத்துக்களை முன் வைத்து வரும் நிலையில், சர்கார் திரைப்படத்தில் விஜய்யுடன் இணைந்து நடித்த நடிகர் ஆறு பாலா, வெளிப்படையாக விஜய் குறித்து பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அரசியலுக்கு நீங்க செட்டாக மாட்டீங்க
இதில், "சர்கார் படம் படப்பிடிப்பில் என் படத்தை எந்த திரையரங்கில் பார்ப்பீங்க என விஜய் என்னிடம் கேட்டார். உதயம் திரையரங்கில் பார்ப்பேன் சார் என கூறினேன். லேசாக சிரித்துவிட்டு, நான் அரசியலுக்கு செட்டாவேனா என கேட்டார். நான் சிரித்தபடி நீங்கள் அரசியலுக்கு செட்டாக மாட்டீங்க சார் என சொன்னேன். ஒரு நொடி என் முகத்தை உண்ணிப்பாக கவனித்துவிட்டு, ஏன் அப்படி சொல்றீங்க என கேட்டார்.
உங்க மேல ஒரு கேஸ் கூட இல்ல, கோடி கணக்கில் கொள்ளை அடிக்கிற மெடிக்கல் காலேஜ் இல்லை, உங்ககிட்ட ரவுடிசம் பண்ண ஆள் இல்லை. இது எதுவுமே உங்ககிட்ட இல்லை, அதனால் நீங்க அரசியலுக்கு செட் ஆகா மாட்டீங்க சார் என சொன்னேன். லேசாக சிரித்துவிட்டு மக்களுக்கு நல்லது செய்ய இதெல்லாம் தேவை இல்லையே நண்பா என்றார். ரொம்ப சென்சிட்டிவான மனிதர். இப்படி ஒரு நிகழ்வு அவர் மனதை மீளா துயரத்திற்கு கொண்டு சென்று இருக்கும்" என அவர் கூறியுள்ளார்.