இரண்டே நாளில் ரூ.100 கோடி வசூல் ! விஜய் செய்ய முடியாத சாதனையை படைத்த மகேஷ் பாபு..
மகேஷ் பாபு படத்தின் இமாலய வசூல் சாதனை
தெலுங்கு சினிமாவின் உச்ச நட்சத்திரமாக திகழ்ந்து வருபவர் நடிகர் மகேஷ் பாபு, இவரின் திரைப்படங்கள் தெலுங்கில் வரவேற்பை பெறுவது மட்டுமின்றி மற்ற மொழிகளிலும் வரவேற்பை பெறும்.
அப்படி சமீபத்தில் மகேஷ் பாபு நடிப்பில் இயக்குனர் பரசுராம் இயக்கத்தில் வெளியான திரைப்படம் Sarkaru Vaari Paata.
பெரிய எதிர்பார்ப்புக்கு இடையே வெளியாகியுள்ள இப்படம் தெலுங்கு சினிமா ரசிகர்களிடையே கலவையான விமர்சனங்களையே பெற்றுள்ளது.
ஆனாலும் கூட இப்படம் பெரிய வசூல் சாதனைகளை நிகழ்த்தி வருகிறது, அதன்படி இப்படம் இரண்டே நாளில் உலகமுழுவதும் ரூ. 103+ கோடி வசூலை குவித்துள்ளது. KGF 2, RRR திரைப்படங்களை தவிர்த்து தற்போது இப்படம் தான் இவ்வளவு பெரிய வசூல் சாதனை செய்துள்ளது.
USA-வில் வசூலை வாரிக்குவித்து வரும் சிவகார்த்திகேயனின் டான்! முதல்நாள் விவரம்..