அனைவரும் எதிர்பார்த்து காத்துக்கொண்டிருக்கும் சார்பட்டா 2 படப்பிடிப்பு எப்போது! லேட்டஸ்ட் அப்டேட்
சார்பட்டா
கடந்த 2022ஆம் ஆண்டு நேரடியாக ஓடிடி-யில் வெளிவந்து மாபெரும் அளவில் வெற்றியடைந்த திரைப்படம் சார்பட்டா. இப்படத்தை முன்னணி இயக்குனர்களில் ஒருவரான பா. ரஞ்சித் இயக்கியிருந்தார்.
இப்படத்தில் ஆர்யா, ஜான் கோக்கன், துஷாரா விஜயன், பசுபதி உள்ளிட்ட பலரும் நடித்திருந்தனர். இப்படம் திரையரங்கில் வெளிவந்திருக்கலாம் என்பதே ரசிகர்களின் வருத்தமாக இருந்தது. அதனை சரி செய்யும் வகையில் சார்பட்டா 2 திரைப்படத்திற்கான அறிவிப்பை வெளியிட்டனர்.
மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற சார்பட்டா படத்தின் இரண்டாம் பாகம் உருவாகிறது என ஏற்கனவே அதிகாரப்பூர்வமான அறிவிப்பு வெளிவந்தது. ஆனால், படப்பிடிப்பு குறித்து எந்த ஒரு அப்டேட்டும் வெளிவரவில்லை.
ஆர்யா கொடுத்த அப்டேட்
இந்த நிலையில், இதுகுறித்து வெளிவந்துள்ள லேட்டஸ்ட் அப்டேட்டில், 2025ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் சார்பட்டா 2 படத்தின் படப்பிடிப்பு துவங்கும் என ஆர்யா பத்திரிகையாளர்கள் சந்திப்பில் கூறியுள்ளார்.
இது இப்படத்தை எதிர்பார்த்து காத்துக்கொண்டிருக்கும் ரசிகர்களுக்கு மகிழ்ச்சியான செய்தியாக வந்தடைந்துள்ளது.