ரூ. 15 கோடி பட்ஜெட்டில் உருவான சர்வம் மாயா.. லாபம் எவ்வளவு தெரியுமா?
சர்வம் மாயா
மலையாள சினிமாவில் தனக்கென்று தனி இடத்தை சம்பாதித்துள்ள நடிகர் நிவின் பாலி. பிரேமம் என்கிற ஒரே ஒரு படத்தின் மூலம் ஒட்டுமொத்த தென்னிந்திய ரசிகர்களின் மனதிலும் இடம்பிடித்தார்.

இவருக்கு எப்போது தரமான ஒரு படம் கம்பேக் ஆக அமையும் என ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருந்த நிலையில், சர்வம் மாயா மிகப்பெரிய வெற்றி படமாக அமைந்தது. கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் வெளிவந்த இப்படத்தை அகில் சத்யன் இயக்கியிருந்தார்.

ரியா சுபு இப்படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார். இப்படத்தில் பேயாக நடித்து இளைஞர்களின் மனதை கவர்ந்த இவருக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது.
பட்ஜெட் - வசூல்
இந்த நிலையில், ரூ. 15 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட சர்வம் மாயா படம், ரூ. 150 கோடி லாபம் கொடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதன்மூலம் மலையாள திரையுலகில் மாபெரும் சாதனையை இப்படம் படைத்துள்ளது.

ஐரோப்பா கேட்டுக்கொண்டால்... ஈரான் போர் மத்தியில் விளாடிமிர் புடின் சொன்ன அந்த வார்த்தை News Lankasri
இறுகும் ஈரான் போர்... மத்திய கிழக்கில் Doomsday அணுசக்தி விமானங்களை களமிறக்கிய ட்ரம்ப் News Lankasri