நடிகையுடன் லிப் லாக் காட்சி.. நடிகர் சசிகுமார் செய்த விஷயம்

Kathick
in பிரபலங்கள்Report this article
சசிகுமார்
சுப்ரமணியபுரம் திரைப்படத்தின் மூலம் ஒட்டுமொத்த இந்திய சினிமாவையும் திரும்பி பார்க்க வைத்தவர் இயக்குனரும் நடிகருமான சசிகுமார். இதன்பின் ஈசன் எனும் திரைப்படத்தை இவர் இயக்கிய நிலையில், நடிப்பில் முழு கவனம் செலுத்தி வருகிறார்.
கடைசியாக அயோத்தி எனும் மாபெரும் வெற்றி திரைப்படத்தை கொடுத்தார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் வருகிற 31ஆம் தேதி கருடன் எனும் திரைப்படம் வெளியாகவுள்ளது. துரை செந்தில் குமார் இயக்கத்தில் உருவாகியுள்ள இப்படத்தில் சூரி, சசிகுமார், உன்னி முகுந்தன் உள்ளிட்டோர் இணைந்து நடித்துள்ளனர்.
லிப் லாக் காட்சி
சசிகுமார் மற்றும் நடிகை லட்சுமி மேனன் இருவரும் இணைந்து நடித்து வெளிவந்த திரைப்படங்களில் ஒன்று குட்டி புலி. இப்படத்தில் லட்சுமி மேனனுடன் லிப் லாக் காட்சி இருக்கிறது என இயக்குனர் கூறிவிட்டாராம். ஆனால், நான் லிப் லாக் காட்சியில் நடிக்க மாட்டேன் என இயக்குனரிடம் தெளிவாக சசி குமார் கூறியுள்ளார்.
இதன்பின் அந்த காட்சியை அப்படியே மாற்றி எடுத்துள்ளனர். அதாவது ஹீரோயின் ஹீரோவிற்கு முத்தம் கொடுத்தது போல் படம் பார்ப்பவர்களுக்கு புரிய வேண்டும் ஆனால், அந்த காட்சி இருக்க கூடாது என்பதற்காக சில கிமிக்ஸ் செய்து அந்த லிப் லாக் காட்சியை எடுத்ததாக சமீபத்திய பேட்டியில் சசிகுமார் கூறியுள்ளார்.