இந்த வருடத்தின் சிறந்த திரைப்படம்.. அயோத்தியில் முதன் முதலில் நடிக்கவிருந்த ஹீரோ சசி குமார் இல்லை, வேறு யார் தெரியுமா
அயோத்தி
இந்த ஆண்டு பல நல்லநல்ல திரைப்படங்கள் நம் தமிழ் சினிமாவில் வெளிவந்தது. அதில் ஒன்று தான் அயோத்தி.

அறிமுக இயக்குனர் மந்திரமூர்த்தி இப்படத்தை இயக்கினார். சசிகுமார், ப்ரீத்தி அஸ்ரானி, புகழ் உள்ளிட்ட நட்சத்திரங்கள் இப்படத்தில் நடித்திருந்தனர். மக்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்று 50 நாட்களை கடந்து திரையரங்கில் ஓடி மாபெரும் வெற்றியடைந்தது.
ஹீரோ இவர் இல்லை
இந்நிலையில், இப்படத்தில் முதன் முதலில் அப்துல் மாலிக் கதாபாத்திரத்தில் ஹீரோவாக நடிக்கவிருந்தது நடிகர் சசிகுமார் கிடையாதாம்.

உறியடி படத்தின் மூலம் ஹீரோவாகவும், இயக்குனராகவும் அறிமுகமான விஜய் குமார் தான் முதன் முதலில் அயோத்தி படத்தில் ஹீரோவாக நடிக்கவிருந்தாராம்.

இயக்குனர் மந்திரமூர்த்தி கூறிய கதையில் தொடர்ந்து பல மாற்றங்களை விஜய் குமார் செய்து வந்ததால், தான் நினைத்த கதையை படமாக எடுக்க முடியாது என்று மந்திரமூர்த்தி படத்திலிருந்து விலகிவிட்டாராம்.
அதன்பின் அதே கதையில் சசிகுமாரை வைத்து அயோத்தி எனும் சிறந்த திரைப்படத்தை தமிழ் சினிமாவிற்கு கொடுத்தார் இயக்குனர் மந்திரமூர்த்தி.
கடலில் 2 நாட்களாக தத்தளித்த 15 வயது சிறுவன்: கவிழ்ந்த படகை பிடித்துக் கொண்டு உயிர் பிழைத்த சம்பவம் News Lankasri