போலியான வருத்தத்திற்கு உண்மையைப் பலி கொடுக்க முடியாது.. ஞானவேலின் பதிலுக்கு சசி குமார் பதிலடி
அமீர் - ஞானவேல்
பருத்திவீரன் திரைப்படம் தொடர்பாக அமீர் - ஞானவேல் இடையே மோதல் கோலிவுட் வட்டாரங்களில் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.
சமீபத்தில் பேட்டி ஒன்றில் அமீருக்கு எதிராக பல கருத்துக்களை முன் வைத்து இருந்தார் ஞானவேல் ராஜா. இவரது பேச்சுக்கு பல பிரபலங்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

ஞானவேல் ராஜா அறிக்கை
இந்நிலையில் ஞானவேல் ராஜா அறிக்கை ஒன்றை வெளியிட்டு இருந்தார். அதில் அவர், என் மீது அமீர் சுமத்திய பொய்யான குற்றச்சாற்றுகள் என்னை மிகவும் காயப்படுத்தியது. அதற்கு பதில் அளிக்கும் போது அவர் மனதை புண்படுத்தி இருந்தால் அதற்கு மனப்பூர்வமாக வருத்தம் தெரிவித்து கொள்கிறேன் என்று தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா அறிவித்து இருந்தார்.

சசி குமார் பதிலடி
இதற்கு பதில் அளித்த சசி குமார், போலியான வருத்தத்திற்கு உண்மையைப் பலி கொடுக்க முடியாது. அமீர் அண்ணன் ஞானவேல் ராஜா மீது சுமத்திய பொய்யான குற்றச்சாட்டுகள் என்ன?
'நான் பயன்படுத்திய சில வார்த்தைகள் புண்படுத்தி இருந்தால்...' என்று குறிப்பிட்டுச் சொல்கிறார் ஞானவேல் ராஜா. அப்படியெனில் அந்த சில வார்த்தைகள்' என்ன?
திட்டமிட்டு ஒருவரை அவமானப்படுத்திவிட்டு அவருக்கு அவரே வருந்துவது என்னமாதிரியான வருத்தம்? இதன்மூலம் அமீர் அண்ணனுக்கு ஞானவேல் ராஜா சொல்ல வருவது என்ன? பெயரிடப்படாத அந்தக் கடிதம் யாருக்கு? என்று சசி குமார் பதிவிட்டு உள்ளார்.
#Ameer #Paruthiveeran #Gnanavelraja pic.twitter.com/VuzqC8Cuvq
— M.Sasikumar (@SasikumarDir) November 29, 2023
ரஷ்யாவுக்குள் அத்துமீறி சீறிப்பாய்ந்த 11 உக்ரைனிய ட்ரோன்கள்: ரஷ்ய பாதுகாப்பு படை அதிரடி News Lankasri
Bigg Boss: உன்னை மாதிரி பொறுக்கித்தனமா பண்றேன்? தைரியம் இருந்தால் துப்புடா! காருக்குள் சண்டை Manithan
30 நொடிகளில் தப்ப முயன்ற 200 பேர்... சுவிட்சர்லாந்தை உலுக்கிய கோர சம்பவத்தின் பகீர் பின்னணி News Lankasri