சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்தின் பாராட்டுகளை அள்ளிக் குவித்த அயோத்தி முதல் முறையாக டிவியில் - முழு விவரம் இதோ
சசிகுமாரின் அயோத்தி
தமிழ் சினிமாவில் ஆர் மந்திர மூர்த்தி அவர்களின் இயக்கத்தில் சசிகுமார், ப்ரீத்தி அஸ்ராணி, யஷ்பால் ஷர்மா, புகழ் உட்பட பலரது நடிப்பில் உருவாகி கடந்த மார்ச் மூன்றாம் தேதி திரையரங்குகளில் வெளியாகி மிகப்பெரிய வரவேற்பை பெற்ற திரைப்படம் அயோத்தி.
அயோத்தியைச் சேர்ந்த பல்ராம் (யஷ்பால் சர்மா), மனைவி ஜானகி (அஞ்சு அஸ்ரானி), மகள் ஷிவானி (பிரீத்தி அஸ்ரானி), மகன் சோனு (அத்வைத்) ஆகியோருடன் புனித யாத்திரைக்காக, ராமேஸ்வரம் வருகிறார்.
குடும்பத்துடன் மதுரை வந்திறங்கும் அவர் அங்கிருந்து டாக்ஸியில் ராமேஸ்வரம் செல்கிறார்கள். பல்ராமின் அவசரத்தால் மோசமான விபத்து ஏற்படுகிறது.
இந்த விபத்தில் படுகாயமடையும் ஜானகி உயிரிழந்து விட, டாக்ஸி ஓட்டுநரின் நண்பர்களான அப்துல் மாலிக் ( சசிகுமார்), பாண்டி ( புகழ்) இருவரும் மொழி தெரியாமல் தவிக்கும் பல்ராம் குடும்பத்துக்கு உதவ வருகிறார்கள்.
மனிதாபிமானத்துடன் அவர்கள் எப்படி உதவுகிறார்கள் என்பது தான் மனதை உருக்கும் இந்த படத்தின் கதை.
ரசிகர்கள் திரையுலக பிரபலங்களான சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் உட்பட பலரின் பாராட்டுகளை அள்ளிக் குவித்த இந்த திரைப்படம் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் வரும்மே 1-ம் தேதி உழைப்பாளர் தின சிறப்பு திரைப்படமாக மதியம் 1 மணிக்கு ஒளிபரப்பாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
மனதை உருக்கும் இந்த உணர்வுபூர்வமான திரைப்படத்தை உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காண தயாராகுங்கள்.