சசிகுமாரின் ராஜவம்சம் படத்தின் ரிலீஸ் எப்போது தெரியுமா.. வெளியான அதிகாரப்பூர்வ அறிவிப்பு
நடிகர் சசிகுமார் நடிப்பில் உருவாகி இருக்கும் படம் ராஜவம்சம். இப்படத்தை புதுமுக இயக்குனர் கதிர்வேலு இயக்கி உள்ளார்.
இப்படத்தில் சசிகுமாருக்கு ஜோடியாக நிக்கி கல்ராணி நடித்துள்ளார். மேலும் சதீஷ், யோகி பாபு, தம்பி ராமையா, விஜயகுமார், உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
49 நடிகர், நடிகைகளுடன் உருவாகும் ராஜவம்சம், தலைப்புக்கு ஏற்றார்போல் குடும்பங்கள் கொண்டாடும் படமாக தயாராகி உள்ளது.
கடந்த மார்ச் மாதமே ரிலீசாக இருந்த இப்படம் கொரோனா இரண்டாவது அலை காரணமாக தள்ளிவைக்கப்பட்டது.
இந்நிலையில், தற்போது இப்படத்தின் புதிய ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டு உள்ளது.
அதன்படி இப்படம் வருகிற அக்டோபர் 1ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

கெட்டவார்த்தை பேசினால் அவனுக்கு பிடிக்காது; திட்டிய ஆசிரியர் - மாணவன் தற்கொலையால் கதறும் தாய்! IBC Tamilnadu

தோண்ட தோண்ட தங்கம்; பல ஆண்டுகளுக்குப் பிரச்சினை இல்லை - மிக பெரிய சுரங்கம் கண்டுபிடிப்பு IBC Tamilnadu
