இலங்கை தமிழர்களாக நடிக்கும் சசிகுமார் - சிம்ரன்.. டூரிஸ்ட் பேமிலி படத்தின் டைட்டில் டீசர்
சசிகுமார்
தமிழ் சினிமாவில் சுப்ரமணியபுரம் படத்தின் மூலம் ஹீரோவாகவும், இயக்குனராகவும் அறிமுகமானவர் சசிகுமார். இதை தொடர்ந்து நாடோடிகள், தாரை தப்பட்டை,சுந்தரபாண்டியன், வெற்றிவேல், அயோத்தி ஆகிய படங்கள் நம் மனதில் இடம்பிடித்தது.
டூரிஸ்ட் பேமிலி
மேலும் இந்த ஆண்டு சசிகுமார் நடிப்பில் வெளிவந்த நந்தன் மற்றும் கருடன் ஆகிய படங்களுக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. சசி குமார் நடிப்பில் புதிதாக உருவாகியுள்ள திரைப்படம் தான் டூரிஸ்ட் பேமிலி.
இப்படத்தில் சசிகுமாருடன் இணைந்து சிம்ரன் நடித்துள்ளார். இலங்கை தமிழகர்களாக இப்படத்தில் நடித்துள்ளனர். டூரிஸ்ட் பேமிலி படத்தின் டைட்டில் டீசர் வெளிவந்துள்ள நிலையில், இலங்கை தமிழ் ரசிகர்களை இந்த டீசர் வெகுவாக கவர்ந்துள்ளது.
இப்படத்திற்கு இசையமைப்பாளர் ஷான் ரோல்டன் இசையமைத்துள்ளார். இந்த படம் அடுத்த ஆண்டு வெளிவரவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.