நீ என்ன பெரிய காந்தியா.. Freedom பட Press Meet-ல் சம்பளம் குறித்து பேசிய சசிகுமார்
சசிகுமார்
அயோத்தி, நந்தன், டூரிஸ்ட் பேமிலி என தொடர்ந்து நல்ல திரைப்படங்களை ஹிட் கொடுத்து வருகிறார் சசிகுமார். இயக்குநர் அபிஷன் ஜீவிந்த் இயக்கத்தில் வெளிவந்த டூரிஸ்ட் பேமிலி திரைப்படம் உலகளவில் ரூ. 91 கோடி வரை வசூல் செய்து ப்ளாக் பஸ்டர் வெற்றியடைந்தது.
இந்த படத்தின் வெற்றி விழாவில் பேசிய சசிகுமாரிடம் சம்பளம் உயர்வு குறித்து கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு அவர், "சம்பளத்தை எல்லாம் உயர்த்த மாட்டேன்" என கூறியிருந்தார். இது ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று தந்தது.
'நீ என்ன பெரிய காந்தியா'
ஆனால், அதன்பின் சசிகுமாரை தொடர்பு கொண்ட பலரும், அவரை செல்லமாக கடிந்து பேசியுள்ளனர்.
அதாவது, "நீ என்ன பெரிய காந்தியா" நீ என்ன தியாகியா? நீ எதுக்கு சம்பளத்தை விட்டு கொடுக்குற? என எவ்வளவு பாராட்டுகளை வந்ததோ, அதே அளவுக்கு திட்டுகளும் வந்தது. நீ பாட்டுக்கு சொல்லிட்டு வந்துட்ட, நீ என்ன பெரிய இவனா, அவனா என்று எல்லாம் கேட்கிறார்கள்" என பேசியிருந்தார் சசிகுமார்.
இந்த தகவலை Freedom படத்தின் Press meet-ல் பகிர்ந்துகொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது. இயக்குநர் சத்யசிவா இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம்தான் Freedom. இப்படத்தில் சசிகுமாருடன் இணைந்து நடிகை லிஜோமோல் ஜோஷ் நடித்துள்ளார். இப்படத்திற்கு விமர்சன ரீதியாக அமோக வரவேற்பு கிடைத்துள்ளது.

வைகோ உயிரை 3 முறை காப்பாற்றினேன்; மகனுக்காக எனக்கு துரோகி பட்டம் - மல்லை சத்யா குற்றச்சாட்டு IBC Tamilnadu

மூன்றாம் உலகப்போர் வெடித்தால்... பிரான்சுடன் அணு ஆயுத ஒப்பந்தம் செய்துகொள்ளும் பிரித்தானியா News Lankasri

ரூ.45,000க்கும் குறைவான விலையில் Hero electric scooter வாங்கலாம்.., குறுகிய கால சலுகை மட்டுமே News Lankasri

கழுத்தில் தாலி ஏறிவுடன் மொத்தமாக மாறிய சீதா.. வாழ்க்கை இழந்த மீனா- பரிதவிப்பில் குடும்பத்தினர் Manithan
