செம ஹிட்டடித்த கான்ஜுரிங் கண்ணப்பன்- இயக்குனருக்கு பரிசு கொடுத்த சதீஷ், என்ன தெரியுமா?
கான்ஜுரிங் கண்ணப்பன்
தமிழ் சினிமாவில் காமெடி நடிகர்கள் நாயகனாக படங்கள் நடிப்பது ஒன்றும் புதியது இல்லை.
அப்படி காமெடியனாக பல முன்னணி நடிகர்களுடன் படங்கள் நடித்து வலம் வந்த நடிகர் சதீஷ் நாயகனாக நடிக்க வெளிவந்த திரைப்படம் தான் காஞ்சூரிங் கண்ணப்பன்.
பேய் படங்கள் தமிழ் சினிமாவிற்கு சலித்து போன ஒரு விஷயம் தான், ஆனால் அந்த கதைக்களத்தில் புதிய படம் இயக்கி வெற்றிக் கண்டுள்ளார் செல்வின் ராஜ் சேவியர்.
சதீஷ் நாயகனாக நடிக்க நாசர், ஆனந்தராஜ், ரெடின் கிங்ஸ்லி, சரண்யா பொன்வண்ணன் மற்றும் ரெஜினா உள்ளிட்ட பலர் இப்படத்தில் நடித்துள்ளார். நயன்தாராவின் அன்னபூரணி படத்துடன் இப்படம் வெளியானாலும் நல்ல வெற்றியை கண்டுள்ளது.

சதீஷ் பரிசு
அண்மையில் செல்வின் ராஜ் சேவியர் தனது பிறந்தநாளை கொண்டாடியுள்ளார். அவருக்கு நடிகர் சதீஷ் இந்தியாவில் மட்டுமில்லாமல் உலக அளவில் பிரபலமான EA (Emporio Armani) வாட்ச் ஒன்றை பரிசாக அளித்துள்ளார்.
அப்போது எடுக்கப்பட்ட வீடியோவையும் சதீஷ் தனது இன்ஸ்டாவில் பதிவு செய்துள்ளார்.
Happy birthday @selvinrajxavier bro. Have a great year with the success of #ConjuringKannappan ?❤️? pic.twitter.com/Xxqongcxso
— Sathish (@actorsathish) December 25, 2023
2026 இன் முதல் சூரிய கிரகணம் இன்று: உருவாகும் 4 ராஜயோகத்தின் முழு பலனும் இந்த 4 ராசிக்கு தான்! Manithan
ஆட்சியில் பங்கு தராவிட்டால் கூட்டணியில் இருந்து வெளியேறுவோம் - மாவட்ட காங்கிரஸ் தீர்மானம் IBC Tamilnadu