அனிதா, நிர்மலா செய்த சூழ்ச்சி.. சத்யாவுக்கு காத்திருக்கும் சவால்! சத்யா 2 சீரியல் அப்டேட்
ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் இரவு 10.30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் சீரியல் சத்யா 2.
முதல் பாகத்தின் வெற்றியை தொடர்ந்து விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வரும் இந்த சீரியல் கிளைமாக்ஸை நோக்கி நகர்ந்து வருகிறது. பிரபு ஜெயிலுக்கு போன நிலையில் சத்யா மீண்டும் போலீசாகி பிரபுவுக்காக அவரே வாதாடி வெளியே கொண்டு வருகிறாள்.
அடுத்து தேர்தலில் எம் எல் ஏ கஜேந்திரனை எடுத்து புனிதாவை சத்யா களமிறங்கிய நிலையில் அனிதா, நிர்மலா செய்த சூழ்ச்சியால் அவள் ஊரை விட்டு ஓட அடுத்து எம் எல் ஏ-க்கு எதிராக பிரபுவை நிறுத்தி கஜேந்திரனுக்கு ஒரு ஓட்டு கூட விழ விடாமல் ஜெயித்து காட்டுறேன் என சவால் விடுகிறாள்.
பிரபுவுக்கு ஆதரவாக அரசியல் பிரச்சாரங்களில் ஈடுபட மெடிக்கல் லீவ் எடுத்து போலீஸ் வேலைக்கு ஓய்வு கொடுக்கிறாள். மஜிலிகுப்பம் சத்யாவுக்கு ஆதராக இருக்க கையாதிக்குப்பம் மக்களுக்கு பணம் கொடுத்து தனக்கு ஆதரவாக மாற்றுகிறான் கஜேந்திரன்.
மேலும் பொதுவாக இருக்கும் நடுக்குப்பம் மக்களுக்கு சத்யா பணம் கொடுத்து ஓட்டு கேட்பது போல் எம் எல் ஏ சூழ்ச்சி செய்ய அந்த ஊரின் முக்கிய ஆளும் நேர்மையான நபருமான சன்யாசி கோட்டசாமி உண்மை தெரியாமல் சத்யாவுக்கு ஆதரவு தர முடியாது என கை விரித்து விடுகிறார். ( கோட்டசாமியாக பிரபல நடிகர் விக்னேஷ் நடிக்க உள்ளதாக சொல்லப்படுகிறது)
இந்த சூழ்நிலையில் சத்யா தவமாய் தவமிருந்து குடும்பத்தை சந்தித்து ஓட்டு சேகரிக்கிறாள். கடைசியில் நடக்க போவது என்ன? பிரபுவை சத்யா தேர்தலில் ஜெயிக்க வைப்பாளா? என்ற கோணத்தில் வரும் நாட்களில் சத்யா 2 சீரியல் ஒளிபரப்பாக உள்ளதாக தெரிய வந்துள்ளது.
ஷூட்டிங் தொடங்கும் முன்பே மிகப்பெரிய பிஸ்னஸ்.. பட்டையை கிளப்பும் தளபதி 67