பிக்பாஸ் 8ல் ஜாக்குலின் கதறி அழுதபடி எலிமினேட் ஆன போது சிரித்தது ஏன்.. ஓபனாக நடந்ததை கூறிய சத்யா
பிக்பாஸ் 8
பிக்பாஸ் 8வது சீசன் ஏதோ ஒரு மேஜிக்காக முடிந்துவிட்டது.
ஆரம்பத்தில் பிக்கப் ஆகாமல் இருந்த இந்த பிக்பாஸ் 8 நிகழ்ச்சி போக போக மக்களின் பேராதரவை பெற தொடங்கியது. இதில் போட்டியிட்ட போட்டியாளர்கள் பலரும் மக்களின் மனதை கொள்ளை கொண்டுவிட்டனர்.
ஏற்கெனவே பிரபலமாக இருந்தாலும் அவர்களுக்கு இந்த பிக்பாஸ் 8 நிகழ்ச்சி பெரிய ரீச் கொடுத்துள்ளது என்றே கூறலாம். அவர்கள் பிக்பாஸ் பிறகு பெரிய வளர்ச்சி அடைய வேண்டும் என்பது ரசிகர்களின் வாழ்த்தாக உள்ளது.
சத்யா விளக்கம்
பிக்பாஸில் எலிமினேட் ஆனவர்களில் ஜாக்குலின் எலிமினேஷன் மக்களுக்கு கடும் சோகத்தை கொடுத்தது.
அவர் கதறி கதறி அழுதபடி எலிமினேட் ஆனபோது சத்யா பின்னால் சிரித்துக்கொண்டிருந்தார், அது ரசிகர்களுக்கே கோபத்தை ஏற்படுத்தி இருந்தது.
இதுகுறித்து கடைசி நிகழ்ச்சியில் விஜய் சேதுபதி கேட்க, சத்யா நான் நிஜமாகவே நீங்கள் வெளியேறியதற்கு வருந்துகிறேன். அங்கு சிலரின் முக பாவனை அப்படி இருந்தது, அதனால் தான் சிரித்தேன்.
உங்களுக்கும் எனக்கும் எந்த பிரச்சனையும் இல்லை, அது வருத்தப்பட வைத்திருந்தால் சாரி என கேட்டுள்ளார்.