நான் பொறுப்பாக முடியாது.. எதிர்நீச்சல் சீரியல் நடிகை பெயரில் பணமோசடி!
சன் டிவி எதிர்நீச்சல் சீரியலில் ஆதிரை ரோலில் நடித்து பிரபலம் ஆனவர் சத்யா தேவராஜன். அவர் அதற்கு பிறகு விஜய் டிவியின் தனம் சீரியலில் ஹீரோயினாக நடித்தார். அந்த தொடர் கடத்து சில மாதங்களுக்கு முன்பு தான் நிறைவு பெற்றது.
நடிகை சத்யாவுக்கு இன்ஸ்டாகிராமில் 4 லட்சத்திற்கும் அதிகமான ரசிகர்கள் இருக்கிறார்கள். இந்நிலையில் தற்போது அவர் ஒரு முக்கிய தகவலை இன்ஸ்டாகிராமில் தெரிவித்திருக்கிறார்.
தன்னுடைய பெயர் மற்றும் புகைப்படங்களை சிலர் தவறாக பயன்படுத்தி பண மோசடியில் ஈடுபடுவதாக அவர் குற்றச்சாட்டு வைத்திருக்கிறார்.

மோசடி
என்னுடைய பெயர், புகைப்படம் மற்றும் வீடியோக்களை தவறாக பயன்படுத்தி சில அக்கவுண்டுகள், பக்கங்கள், டெலிகிராம் மற்றும் போன் நம்பர்கள் பண மோசடி செய்து வருகின்றனர்.
அவற்றை கண்டால் உடனே ரிப்போர்ட் செய்யுங்கள். அவர்களுக்கு எந்த விதமான பணமும் அளிக்க வேண்டாம். அவர்கள் பற்றி பலமுறை புகார் அளித்தும் அவர்கள் தொடர்ந்து செயல்பட்டு கொண்டுதான் இருக்கிறார்கள்.
"இதனால் ஏற்படும் பண இழப்புகளுக்கு நான் எந்த விதத்திலும் பொறுப்பாக முடியாது" என நடிகை சத்யா தேவராஜன் கோபமாக இன்ஸ்டாகிராமில் பதிவிட்டு இருக்கிறார்.
அவரது பதிவு இதோ..
சவுதியில் தமிழருக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனை: இந்திய பிரதமர் மோடிக்கு இலங்கை எம்.பி கோரிக்கை News Lankasri
பிரித்தானியாவில் எதிர்ப்பை மீறி புலம்பெயர்ந்தோருக்கு புகலிடம்: குழந்தைளுடன் பொதுமக்கள் ஆர்ப்பாட்டம் News Lankasri