சின்ன ட்ரெஸ் போட கூடாதுனு சொல்ல நீ யாரு- கொந்தளித்த சத்யராஜ் மகள்
நடிகர் சத்யராஜின் மகள் திவ்யா Nutritionist ஆக பணியாற்றி வருகிறார். அவர் அவ்வப்போது வெளியிடம் அறிக்கைகள் இணையத்தில் வைரல் ஆகும்.
பெரியரிஸம் மீது ஈர்ப்பு கொண்ட திவ்யா தற்போது பெரியார் சிலை போட்டோ ஒன்றை பதிவிட்டு இன்ஸ்டாவில் பதிவு ஒன்றை போட்டிருக்கிறார். பெண்களுக்கு இருக்கும் கட்டுப்பாடுகள் பற்றி தான் அதில் பேசி இருக்கிறார்.
"புதிதாக திருமணமான பெண்ணிடம் அவளது மாமியார் தினமும் நெற்றியில் பொட்டு வை என கூறிக்கொண்டே இருக்கிறார். ஒரு பெண் நெற்றியில் என்ன செய்ய வேண்டும் என்பதை முடிவு செய்ய கூட வேறு ஒருவருக்கு தான் உரிமை இருக்கிறது." "நான் இன்ஸ்டா பக்கம் தொடங்கிய போது பலரும் எனக்கு அட்வைஸ் செய்தார்கள், ஷார்ட் உடை அணிந்து போட்டோ போடாதீர்கள் என சொன்னார்கள்.
அரசியலில் இருக்க விரும்பும் பெண்கள் காட்டன் சேலையில் தான் இருக்க வேண்டும், உடலை காட்டும் உடைகளில் அல்ல என சொன்னார்கள்.
எலக்ஷனில் ஜெயிப்பதற்காக மட்டும் நான் அப்படி என்னை காட்டிக்கொள்ள மாட்டேன்." "ஒரு பெண் விரும்புவதை செய்வதற்கு, விரும்பும் உடையை போடுவதற்கு, விருப்பம் போல வாழ்வதற்கு உரிமை வேண்டும்" என கூறி இருக்கிறார் திவ்யா சத்யராஜ்.

பிறப்பிலேயே சக்திவாய்ந்த மற்றும் கவர்ச்சிகரமான ராசியினர் இவர்கள் தானாம்... யார் யார்ன்னு தெரியுமா? Manithan
