நடிகர் சத்யராஜின் உடல்நிலை எப்படி உள்ளது, அவரது மகன் சொன்ன விஷயம்- டுவிட் இதோ
நடிகர் சத்யராஜ் தமிழ் சினிமாவில் ஒரு கலக்கு கலக்கியவர். நாயகனாக, ஹீரோவாக, குணசித்திர நடிகராக என நடிக்கிறார்.
பாகுபலி படத்தில் கட்டப்பாவாக நடித்து பெரிய அளவில் பேசப்பட்டார், தொடர்ந்து தமிழ், தெலுங்கு என இரு மொழிகளிலும் நடிக்கிறார்.
அண்மையில் நடிகர் சத்யராஜ் கொரோனா நோயால் பாதிக்கப்பட்டு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். இப்போது என்னவென்றால் சத்யராஜ் உடல்நிலை சரியாகிவிட்டதாம்.
வீட்டிற்கு வந்துவிட்டதாகவும் சில நாட்கள் ஓய்விற்கு பிறகு மீண்டும் பணிகளை தொடங்குவார் என அவரது மகன் சிபி சத்யராஜ் டுவிட் செய்துள்ளார்.
அவரது டுவிட் கண்ட ரசிகர்கள் அவர் விரைவில் குணமடைய வேண்டும் என கமெண்ட் செய்து வருகிறார்கள்.
Hey guys..Appa got discharged from the hospital last night and back home..He’s totally fine and will resume work after few days of rest..Thank you all for your love and support! ??? #Sathyaraj
— Sibi Sathyaraj (@Sibi_Sathyaraj) January 11, 2022