சத்யராஜ் பட தயாரிப்பாளர் மரணம்.. இறுதி சடங்கிற்கு வெளிநாட்டில் இருந்து வரும் மகள்கள்
ராமநாதன்
தமிழ் திரையுலகில் பிரபலமான தயாரிப்பாளர்களில் ஒருவர் எம். ராமநாதன். இவர் வயது 72. ராஜ் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனத்தின் மூலம் படங்களை தயாரித்து வந்தார்.
மரணம்
இந்த நிலையில் உடல்நல குறைவு காரணமாக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த இவர், நேற்று காலமானார். தயாரிப்பாளர் ராமநாதனின் மறைவிற்கு திரையுலகை சேர்ந்த பலரும் தங்களுடைய இரங்கலை தெரிவித்து வருகிறார்கள்.
இவர் நடிகர் சத்யராஜின் மேலாளராகவும் பல ஆண்டுகள் பணியாற்றியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இவருடைய தயாரிப்பில் வாத்தியார் வீட்டு பிள்ளை, நடிகன், வள்ளல், திருமதி பழனிசாமி, பிரம்மா, உடன்பிறப்பு போன்ற படங்களில் சத்யராஜ் ஹீரோவாக நடித்துள்ளார். மேலும் விஜயகாந்தின் தமிழ் செல்வன் படத்தையும் இவர் தயாரித்துள்ளார்.
தயாரிப்பாளர் ராமநாதனுக்கு பிரமிளா என்கிற மனைவியும், காருண்யா மற்றும் சரண்யா ஆகிய இரு மகள்களும் உள்ளனர். மகள்கள் இருவரும் வெளிநாட்டில் இருப்பதால், அவர்கள் சென்னை வந்ததும், நாளை புதன்கிழமை அன்று இறுதி சடங்குகள் நடக்கும் என தகவல் வெளியாகியுள்ளது.

சவுதி தூதருடன் தொடர்பு.,ஊடகங்களில் பரவிய வீடியோ: பங்களாதேஷ் மாடல் மேக்னா ஆலம் அதிரடி கைது! News Lankasri
