சட்டமும் நீதியும் 2 (வெப் சீரிஸ்) திரை விமர்சனம்

By Tony Oct 28, 2026 09:00 AM GMT
Report

சட்டமும் நீதியும் 2

தமிழில் ஓடிடி வருகைக்கு பிறகு பல வெப் சீரிஸுகள் வந்து கொண்டு இருக்கிறது.

அந்த வகையில் ஜீ5 தளத்தில் சரவணன் நடிப்பில் பாலாஜி செல்வராஜ் இயக்கத்தில் மிகப்பெரிய வரவேற்பு பெற்ற, சட்டமும் நீதியும் வெப் சீரிஸின் இரண்டாம் பாகம் தற்போது வெளிவந்துள்ளது, முதல் சீசன் போலவே இதுவும் வரவேற்பு பெற்றதா? பார்ப்போம்.

சட்டமும் நீதியும் 2 (வெப் சீரிஸ்) திரை விமர்சனம் | Sattamum Needhiyum Season 2 Review

கதைக்களம்

சரவணன் முதல் சீசனில் வழக்கில் வெற்றிபெற்று பெரிய இடத்தில் இருப்பார் என்று பார்த்தால் அதே இடத்தில் கொஞ்சம் முன்னேறியுள்ளார், அந்த நேரத்தில் வரலட்சுமி கணவர் ப்ரேம் தன்னை தானே சுட்டுகொண்டு இறந்துள்ளார் என ஒரு வழக்கு வருகிறது.

அந்த வழக்கில் அது அவரே சுடவில்லை, 4 போலிஸார் சேர்ந்து சுட்டுள்ளனர் என்ற சந்தேகத்தில் வரலட்சுமி தானே அந்த கேஸை எடுத்து வாதாடுகிறார். யாருமே அந்த 4 போலிஸாருக்கு ஆதரவாக வாதாடாத நிலையில், சரவணன் இந்த கேஸை எடுத்து, அந்த 4 போலிஸுக்காக வாதாட முன்வருகிறார், இதை தொடர்ந்து இந்த கேஸிலும் சரவணன் வெற்றிபெற்றாரா என்பதே மீதிக்கதை.

சட்டமும் நீதியும் 2 (வெப் சீரிஸ்) திரை விமர்சனம் | Sattamum Needhiyum Season 2 Review

சீரிஸ் பற்றிய அலசல்

சரவணன் கன கச்சிதமாக இந்த ரோலுக்கு பொருந்தி போகிறார், முதல் சீசனில் எப்படியிருந்தாரோ அதே கண்ணியத்துடன் இதிலும் சீரிஸ் முழுவதும் வந்து செல்கிறார், வழக்கம் போல் யாருமே எடுக்காத ஒரு கேஸை அவர் எடுத்து அதில் திறம்படவும் வாதாடுகிறார், குறிப்பாக தன் உதவியாளருடன் நாளை நீதிமன்றத்தில் நடக்கும் விஷயங்களை அவர் வாதாடி பார்க்கும் காட்சி சூப்பர்.

வரலட்சுமியும் தனக்கான ரோலை நன்றாக செய்துள்ளார், ஆனால், பெரிதாக எந்த டப்-ம் கொடுக்கவிக்லை, இதை தவிற நடித்த எல்லோரும் சிறப்பாகவே நடித்துள்ளனர்.

சட்டமும் நீதியும் 2 (வெப் சீரிஸ்) திரை விமர்சனம் | Sattamum Needhiyum Season 2 Review

ஒரு மரணம் அதை சுற்றி நடக்கும் மர்மம், கதை முன்னும் பின்னும் சென்று அதன் உண்மைகளை வெளியே கொண்ட விதம் சுவாரஸ்யம், அதே நேரத்தில் முதல் சீசனில் இருந்த பரிதவிப்பும், பதட்டமும் இந்த சீசனில் மிஸ்ஸிங்.

கடைசி டுவிஸ்ட் தவிற எந்த ஒரு இடத்திலும் எட்ஜ் ஆப் தி சீட் என்று எதுமில்லை, மேலும் சரவணன் முதல் சீசனில் நிறைய தடுமாற்றம் இருக்கும், அந்த தடுமாற்றத்தை தாண்டி அந்த வழக்கை முடிப்பார்.

ஆனால் இந்த சீசனில் மாஸ் ஹீரோ போல் அவர் அடுத்தடுத்து எந்த தடுமாற்றம் இல்லாமல் ஜெயித்துகொண்டே போவது கொஞ்சம் மாஸ் ஹீரோ கதை போல் ஆகிவிட்டது. ஆனாலும் ஒரு எபிசோட் 20 நிமிடம், 6 எபிசோட் என்பது பார்வையாளர்களுக்கு எந்த ஒரு சோர்வையும் தராமல் பார்க்க வைப்பதே இயக்குனரின் வெற்றி.

க்ளாப்ஸ்

சரவணன் நடிப்பு கிளைமேக்ஸ் டுவிஸ்ட்

பல்ப்ஸ்

பெரிய பதட்டமே இல்லாமல், சரவணன் ஜெயித்துகொண்டே போவது.

மொத்தத்தில் முதல் சீசன் அளவிற்கு ஆழம் இல்லை என்றாலும் முடிந்தளவிற்கு இயக்குனர் போர் அடிக்காமல் பேக் செய்து கொடுத்ததே வெற்றி.

2.75/5

(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US