அசுரன் படத்திற்கு ஈடாகுமா வெந்து தணிந்தது காடு! எழுத்தாளர் விளக்கம்

asuran vtk
By Jeeva Aug 09, 2021 08:50 AM GMT
Report

இயக்குனர் கவுதம் மேனன் இயக்கத்தில் சிம்பு நடிப்பில் உருவாகவுள்ள திரைப்படம் தான் வெந்து தணிந்தது காடு, இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் சமீபத்தில் வெளியாகி பெரியளவில் பேசப்பட்டது.

மேலும் வெந்து தணிந்தது காடு திரைப்படம் அசுரன் படம் போன்று கிராமத்து கதையம்சம் கொண்டது என கூறப்பட்டு வரும் நிலையில் இது குறித்து எழுத்தாளர் ஜெயமோகன் தனது சமூக வலைத்தளத்தில் விளக்கமளித்துள்ளார்.

அவர் கூறியதாவது "கௌதம் மேனனின் ‘வெந்து தணிந்தது காடு’ முதலில் நதிகளில் நீராடும் சூரியன் என்று பெயரிடப்பட்டிருந்த படம்தான். அந்தக் கதை மென்மையான நகர்ப்புறக் காதல் கதை. அதுவும் பின்னர் படமாகவே வாய்ப்பு. சிலம்பரசன் இப்போது உடல்மெலிந்து சிறுவன் போல இருக்கிறார்.

அவருக்கு பொருந்தும் கதை என்பதனால் இந்தக் கதை தேர்வு செய்யப்பட்டது. அவருக்காக கதை உருவாக்கப்படவில்லை, கதைக்காக அவரே தன்னை மாற்றிக்கொண்டிருக்கிறார்.

அசுரன் அல்லது கர்ணன் போன்ற கிராமப்புறக் கதை அல்ல இது. கிராமப்புறமும் உண்டு.ஆனால் மிகையான சாகசங்கள் ஏதும் இல்லாத நம்பகமான சினிமா. வேறு படங்களின் சாயல் ஏதும் இல்லாதது.

கௌதம் மேனனின் ஸ்டைலான படமாக்கல் உடையது. ஆனால் rustic என்று சொல்லப்படும் கரடுமுரடான அழகியல் கொண்டது" என ஜெயமோகன் வெந்து தணிந்தது காடு படம் குறித்து கூறியுள்ளார். 


(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US