சன் டிவி-யின் பிரம்மாண்ட சமையல் நிகழ்ச்சியின் ப்ரோமோ, TRP-யில் குக் வித் கோமாளியை தோற்கடிக்குமா
சமையல் கலையை மையப்படுத்தி உலகம் முழுவதிலும் அதிகப்படியான சமையல் நிகழ்ச்சிகள் ஒளிபரப்பாகி வருகிறது.
அந்த வகையில் பிரபல விஜய் டிவி தொலைக்காட்சியில் சமையல் நிகழ்ச்சியையே வித்தியாசமான முறையில் காமெடி கலந்து ஒளிபரப்பாகி வருகின்றனர்.
மேலும் குக் வித் கோமாளி சமையல் கலந்த காமெடி நிகழ்ச்சி என்றாலும் அந்த தொலைக்காட்சியில் இந்த நிகழ்ச்சி தான் ரசிகர்களை பெரியளவில் கவரப்படும் நிகழ்ச்சியாக உள்ளது.
இந்நிலையில் தற்போது சன் டிவியும் சமையல் நிகழ்ச்சி ஒன்றை கையில் எடுத்துள்ளது.
ஆம், உலகின் 40 நாடுகளுக்கும் மேலாக ஒளிபரப்பாகி மாபெரும் வெற்றி பெற்ற ‘மாஸ்டர் செஃப்’ என்ற நிகழ்ச்சியை தமிழில் ஒளிபரப்ப உள்ளனர்.
மேலும் இந்த நிகழ்ச்சி குறித்த ப்ரோமோவை வெளியிட்டுள்ள சன் டிவி, அந்த நிகழ்ச்சி விரைவில் ஒளிபரப்பாகும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
அதுமட்டுமின்றி இந்த நிகழ்ச்சியை விஜய் சேதுபதி தொகுத்து வழங்குவார் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.