மகளை ரீல்ஸ் வீடியோ ஆட வைத்து கெடுக்கும் நித்யா: மீட்டு கொடுக்க தாடி பாலாஜி புகார்
நடிகர் தாடி பாலாஜி தற்போது பிக் பாஸ் அல்டிமேட் ஷோவில் போட்டியாளராக கலந்துகொண்டுவிட்டு திருப்பி வந்திருக்கிறார். அவர் உள்ளே இருக்கும்போது அவரது மனைவி நித்யா அவர் தன்னை பற்றி ஷோவில் பேசினால், அவரது ஆடியோ பதிவுகளை வெளியிட்டுவிடுவேன் என மிரட்டி இருந்தார்.
தாடி பாலாஜி புகார்
இந்நிலையில் தாடி பாலாஜி தற்போது தனது மகளை மீட்டு தரும்படி புகார் அளித்து இருக்கிறார். "சொந்த லாபத்திற்காக மகளையும் ரீல்ஸ் செய்ய வைத்து அதில் வரும் கமெண்டுகளை பார்க்கும்போது கஷ்டமாக இருக்கிறது. "
"நித்யா இன்னொரு திருமணம் கூட செய்துகொண்டு வாழட்டும். ஆனால் மகள் வாழ்க்கையை கெடுக்க வேண்டாம் என்று தான் கூறுகிறேன்."
தேர்வு எழுதவில்லை
"மகள் போஷிகா பள்ளியில் இருந்து அழைத்தார்கள். 6 எக்ஸாம் எழுத வேண்டிய இடத்தில் மூன்று மட்டுமே எழுதி இருக்கிறார். என்ன என கேட்டால் லீவ் போட்டுவிட்டு ஈவென்ட் ஒன்றிற்கு நித்யா கூட்டி சென்றிருக்கிறார்."
"நித்யா என்னிடம் தொடர்ந்து பணம் கேட்கிறார். பிக் பாஸ் சென்று வந்தால் நான் கோடிஸ்வரன் ஆகிட்டேன் என நினைக்கிறார். "
இதனால் மகளை மீட்டு கொடுங்கள் என தாடி பாலாஜி குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையத்தில் புகார் கூறி இருக்கிறார்.